சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் 29 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் திருட்டு.
மருத்துவமனை நிர்வாகம் புகாரின் பேரில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தை கையாளும் அலுவலர்களிடம் காவல்துறையினர் விசாரணை.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவாமல் இருக்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று 29 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் திருடப்பட்ட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்து கையாளும் அலுவலர்களிடம் காவல்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரெம்டெசிவர் தட்டுப்பாடு ஏற்பட்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் சேலம் அரசு மருத்துவமனை இருந்து 29 ரெம்டெசிவர் மருந்துகள் திருடப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் டெம்டெசிவர் மருந்து தேவையை பயன்படுத்தி பல மருத்துவமனைகளில் இருந்து மருந்துகள் திருடப்பட்டு, கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. குறிப்பாக மருத்துவ பணியாளர்களே இதில் தொடர்பு இருப்பது தெரியவந்து அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் திருடுவது போல, தற்போது உயிருக்கு விலை வைத்து ரெம்டெசிவர் மருந்து திருடுவது அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக சம்மந்தப்ப மருந்து இருக்கும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து ரெம்டெசிவர் மருந்து திருடு போய் வருவது நோயாளிகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.