Airtel 5G: ஹலோ, 5ஜி.. சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்தது ஏர்டெல்!

Airtel 5 G Service in Chennai: சென்னையில் பயன்பாட்டுக்கு வந்தது ஏர்டெல் 5ஜி சேவை.

Continues below advertisement

சென்னையில் இனி இண்டர்நெட் ஸ்பீட் 5ஜி-யில் கிடைக்கும். சென்னையில் 5-ஜி சேவை தொடங்கியுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் 5-ஜி தொழில்நுட்ப சேவை இன்று முதல் தொடங்குகிறது.

Continues below advertisement

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5-ஜி சேவையை கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5ஜி சேஎவை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் 5ஜி சேவை இன்றிலிருந்து தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வேகம், 4ஜியை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும். 4ஜி சிம்கார்டிலேயே 5ஜி சேவையை பெறலாம். 5ஜிக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத்,சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இன்றிலிருந்து 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

5ஜி தொழில்நுட்பம் தொடக்கம் குறித்து ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல், "இந்தியாவின் தொழில்நுட்ப சேவையில் கடந்த 27 ஆண்டுகளாக ஏர்டெலின் பங்களிப்பு முக்கியமானது. நாட்டின் தொலைதொடர்பு புரட்சியில் ஏர்டெலின் பங்களிப்பு அளப்பரியது. இன்று முதல் சிறப்பான புரட்சியில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளோம்.  ஏர்டெல் வேகமான இணைய வசதியினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியம். அதனால், தற்போது ஏர்டெல் 4ஜி சிம் வைத்திருக்கும் பயனர்கள் தங்களது 5ஜி தொலைபேசியில் அந்த சிம் கார்டினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்.

சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரமை வாங்கியுள்ளது. இதன் மூலம், அதன் ஸ்பெக்ட்ரம் ஹோல்டிங்கை மேம்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை வாங்கிய பாரதி ஏர்டெல், இந்தியாவில் 5ஜி புரட்சியை ஏற்படுத்துவதற்கு நல்ல நிலையில் இருப்பதாக கூறியிருந்தது.

இப்போதைக்கு ஆப்பிள், சாம்சங், சியோமி, விவோ, ஓப்போ, ரியல்மீ மற்றும் ஒன் பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கும் ஸ்மாட்ஃபோன் மாடல்களை வழங்கி வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் ஒரு நொடிக்கு 600 மெகா பிட் ஆக இருக்கும் என்று கூறப்படுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola