மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முக்கிய மென்பொருளான இன்டர்நெட் எஸ்ப்ளோரர் பிரவுசரை 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 15 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு, இணையத்துடனான முதல் முயற்சியானது இன்டர்நெட் எஸ்ப்ளோரர் மூலம் தொடங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளதால் எஸ்ப்ளோரர் பிரவுசரால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



மைக்ரோசாப்ட் எட்ஜ்


வரும் ஜூன் 15, 2022 ஆம் தேதி இதன் சேவையை முழுமையாக நிறுத்த போவதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பை, கடந்த ஆண்டு தனது வலைப்பதிவின் மூலம் மைக்ரோசாப்ட் அறிவித்தது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரிலேயே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரை ("ஐஇ மோட்") என்று உள்ளமைக்கப்பட்டு இருப்பதால், யூசர்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அடிப்படையிலான இணையதளங்களையும் பயன்பாடுகளையும் மைக்ரோசாஃப்ட் எட்ஜிலிருந்தும் நேரடியாக அணுகலாம் என்று மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மேலாளர் ஷான் லிண்டர்சே தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


குறைந்த பயனாளர்கள்


2003 இல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 95 சதவீதத்தினர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் பயன்படுத்தி உள்ளனர். அதனை தொடர்ந்து வந்த வருடங்களில் அதன் பயன்பாட்டாளர்கள் குறைந்து கொண்டே வந்துள்ளனர். 2016க்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்த ஒரு அப்டேட்டையும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கொடுக்கவில்லை. மைக்ரோசாப்ட் எட்ஜ் கொண்டு வந்த பிறகு அப்படியே மெதுவாக எக்ஸ்ப்ளோரரை ஓரம் கட்டி இருந்தது. 



ஷான் லிண்டர்சே


"விண்டோஸ் 10-இல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்த விரும்பினால் அதை மைக்ரோசாஃப்ட் எட்ஜில் பயன்படுத்தி கொள்ளலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 டெஸ்க்டாப் பயன்பாட்டை நிறுத்த உள்ளோம் என்றும், விண்டோஸ் 10'இன் சில பதிப்புகளுக்கு ஜூன் 15, 2022 அன்று ஆதரவு இல்லாமல் போகும்", என்றும் சீன் லிண்டர்சே கூறினார்.


எந்த வெர்ஷன்களில் கிடைக்கும்


விண்டோஸ் 8.1, விண்டோஸ் 7 ESU, விண்டோஸ் SAC அல்லது விண்டோஸ் 10 IoT LTSC உள்ளிட்ட பிற விண்டோஸ் பதிப்புகளில் இன்டர்நெட் எஸ்ஸ்புளோரர் 11 டெஸ்க்டாப் பயன்பாடுகள் மாறாமல் அப்படியே இருக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பயன்பாடு நீண்ட காலமாக உள்ளது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் வெப் பயன்பாட்டிற்கான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 வெர்ஷனுக்கான ஆதரவையும், கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் 365 சேவைகளின் ஆதரவையும் மைக்ரோசாப்ட் நிறுத்தியது. ஆகஸ்ட் 17, 2022 அன்று ஆபீஸ் 365, ஒன் டிரைவ், அவுட் லுக் போன்ற மைக்ரோசாப்ட்'இன் ஆன்லைன் சேவைகளுக்கு இன்டர்நெட் எஸ்புளோரர் 11 ஆதரவு ஏற்கனவே கைவிடப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.