நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை டெலிவரி வீடியோவை பகிர்ந்துள்ளார். 


தமிழில் கார்த்தியுடன்  ‘சகுனி’ சூர்யாவுடன் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரணிதா. கடந்த ஆண்டு பெங்களூர் தொழிலதிபர் நித்தின் ராஜூவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அண்மையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த பிரணிதா, “ தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும், இதனை சாத்தியப்படுத்திய மருத்துவகுழுவினருக்கு நன்றி” என்றும் பதிவிட்டு இருந்தார்.






இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரம்பம் முதலே தனது பிரசவ காலம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வந்த பிரணிதா தற்போது தான் கருவுற்றது, கர்ப்பகாலத்தில் மருத்துவமனையில் செய்த சோதனை, குழந்தை வயிற்றில் உதைத்தது, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு பின்பு மருத்துவர்கள் உதவியுடன் குழந்தையை பெற்றெடுத்தது உள்ளிட்டவை அடங்கிய வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






இந்த வீடியோவை பார்த்த அவரது ஃபாலோயர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.