இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதில் பல நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் கௌதம் அதானி தலைமயின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் 5ஜி ஓட்டப்பந்தயத்தில் களமிறங்க இருப்பதாக கூறி பலருக்கும் சர்ப்ரைஸ் ஷாங்கிங் கொடுத்திருக்கிறது. இது இது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டெலிகாம் ஜார் , ஏர்டெல் ஆகியவற்றுக்கு எதிராக நேரடியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதானி குழுமம் ஜூலை 26 அன்று 5G ஏலத்தில் பங்கேற்றால், அது அம்பானியுடன் முதல் நேரடி போட்டியாக இருக்கும்.




அதானி குழுமம் அறிவிப்பு :


"இந்த ஏலத்தின் மூலம் அடுத்த தலைமுறை 5G சேவைகளை வெளியிட இந்தியா தயாராகி வரும் நிலையில், திறந்த ஏலத்தில் பங்கேற்கும் பல நிறுவனங்களில் நாங்களும் ஒருவராக இருக்கிறோம்" என அதானி குழுமம் தங்களது அறிவிப்பில்  தெரிவித்துள்ளது.


ஏலம் எப்போது ?


5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் ஏலம் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும்  என தொலைத்தொடர்பு துறையானது விண்ணப்பங்களை அழைப்பதற்கான அறிவிப்பில் (என்ஐஏ) அறிவித்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரைத்த ரிசர்வ் விலையில் 5ஜி ஏலத்துக்கு கடந்த மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 5 ஜி சேவையை பெற ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளன. அதானி குழுமம் சமீபத்தில் தேசிய நீண்ட தொலைவு (NLD) மற்றும் சர்வதேச நீண்ட தொலைவு (ILD) உரிமங்களை பெற்றுள்ளதும் நினைவு கூறத்தக்கது.




ஸ்பெக்ட்ரம் எவ்வளவு ஏலத்தில் இருக்கும் ?


ஏலத்தின் போது மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இருக்கும் . இதன் மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி  குறைந்தபட்சம்  (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ்), மிட் (3300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் அதிக (26 ஜிகாஹெர்ட்ஸ்) அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும்.


ஸ்பெக்ட்ரம் தள்ளுபடியாகும் தன்மை :


ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையின் செல்லுபடி காலம் 20 ஆண்டுகள். ஏலதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெக்ட்ரத்தை வழங்க விருப்பம் வழங்கப்படும். இந்த ஏலத்தில் பெறப்பட்ட அலைக்கற்றைக்கு SUC (ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம்) விதிக்கப்படாது.


விதி முறைகள் :


ஏலதாரர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. ஸ்பெக்ட்ரமிற்கான கட்டணங்களை 20 சம வருடாந்திர தவணைகளில் செலுத்தலாம், ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் முன்கூட்டியே செலுத்த வேண்டும், இது பணப்புழக்கத் தேவைகளை கணிசமாக எளிதாக்கும் மற்றும் இந்தத் துறையில் வணிகம் செய்வதற்கான செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எப்போது தொடங்குகிறது 5ஜி ?


இந்தியாவில் 5ஜி சேவைகள் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.