என்னதான் மசாலா சமோசா சாப்பிட்டாலும், எப்பவுமே நம்ம கண்கள் குட்டி சமோசாவைத்தான் தேடும். அப்படியே லபக் லபக்குனு 4, 5 கூட உள்ளே போயிடும்..


இந்தியாவானது மிகப்பரந்த நிலப்பரப்புகளையும்,140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட  மொழிகளையும் 30 மேற்பட்ட மாநிலங்களையும் கொண்டுள்ளது. இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை, கலாச்சாரம், பழக்க வழக்கம்  மற்றும் உணவு முறைகள் இருக்கின்றன.


இங்கு விதவிதமான உணவுகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை.நாம் விதவிதமாக தேர்வு செய்து சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. வட இந்தியா முழுமைக்கும் சமோசாவானது மிக பிரபலமான உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவிலும் சமோசாக்கள் கிடைக்கின்றன. இருப்பினும் வட இந்தியாவில் சமோசாவை  போல தென்னிந்தியாவில் மெதுவடை, மசால்வடை மற்றும் பஜ்ஜிபோன்ற  உணவுகள்  தேநீருக்கு ஏற்ற சிற்றுண்டிகள் ஆகும்.


இந்த சமோசாவில் விதவிதமான வகைகள் இருக்கின்றன. உருளைக்கிழங்கு சமோசா, பன்னீர் சமோசா,வெங்காய சமோசா,கேரட் மற்றும் கோஸ் சமோசா,மேகி சமோசா, மற்றும் சாக்லேட் சமோசா, பழைய சமோசா முறைகளும் புதிய சமோசா முறைகளுமாக நிறைய வகைகள் இருக்கின்றன.



 வெங்காய சமோசா செய்வது எப்படி என்பதை இதில் காணலாம்.


1.சமோசாவின் வெளிப்புறத்திற்கு மைதா மாவு ஆகச் சிறந்ததாக இருக்கும் ,தேவையான அளவு மைதா மாவை பிசைந்து எடுத்துக்கொண்டு ஒரு மணிநேரம் நன்றாக ஊற வைக்கவும். 


2. பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு செய்வதுபோல மாவை தயார் செய்து கொள்ளவும்.


3. பிறகு தேவையான அளவு  அவல் ஊற வைத்துக் கொள்ளவும். 


4. இதற்கு தேவையான அளவு வெங்காயத்தை நறுக்கி எடுத்துக்கொள்ளவும் .


5. பின்னர் இஞ்சி பூண்டு விழுதை தயார் செய்து கொள்ளவும்.


6. வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் ,பயிறு, சீரகம் இவற்றை நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.


7. இதன் பின்னர் தேவையான அளவு கருவேப்பிலை இலைகளை போடவும், பின்பு வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை இதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.


8. இதனுடன் தேவைப்பட்டால் பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்க்கலாம் உங்களுக்கு மிளகாய் நேரடியாக ஒத்துவரவில்லை என்றால் இந்த கலவையில் மிளகாய்த்தூள் தேவையான அளவு சேர்க்கவும்.


9. பின்னர் இதில் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும், இறுதியாக ஊற வைத்திருக்கும் அவளை இதில் கலந்து நன்றாக வதக்கவும், தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்.


10. இந்த கலவையை நன்றாக வதக்கி அனைத்து பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை நன்றாக ஆற வைத்து விடுங்கள்.


11. இப்போது தட்டையாக உருட்டி வைத்திருக்கும் மைதா மாவில், தேவையான அளவு வெங்காய அவள் கலவையை வைத்து, சமோசாவாக தயார் செய்யவும், 


12. இப்படி அனைத்து கலவையையும் சமோசாக்களாக தயார் செய்த பிறகு வானலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு செய்யவும் ,இதில் தயார் செய்து வைத்திருக்கும் சமோசாக்களை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும் .இப்போது சுவையான வெங்காய சமோசா தயாராகிவிடும்.


சிலருக்கு சமோசா மாவு மைதாவில் செய்வதில் உடன்பாடு இல்லாமல் இருந்தால் நீங்கள் கோதுமை மாவையும் முயற்சித்து பார்க்கலாம். இதைப்போலவே இந்த சமோசாவில் மற்றும் ஒரு வசதி உள்ளது ,பொதுவாக குழந்தைகள் பலரும் சமோசாவை விரும்பி உண்ணுகிறார்கள், ஆனால் காய்கறிகளை உண்ணுவதில்லை, ஆகையால் அவர்களுக்கு தேவையான காய்கறிகளை சமைத்து சமோசாவிற்கு உள்ளே வைத்து செய்து செய்து கொடுக்கலாம்.