2021-ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. இந்நேரத்தில் 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் இன்ஸ்டால் செய்யப்பட்ட டாப் ஆண்ட்ராய்ட் செயலிகள் என்னவென்று பார்க்கலாம். இந்திய மக்கள் சோஷியல் மீடியாக்களிலும், ஷார்ட் வீடியோ பதிவிடும் செயலிகளிலும் அதிக ஆர்வத்தை செலுத்தியுள்ளனர். அதேபோல் செல்போன் கேம்களும் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ந்துள்ளன.  


Instagram 
பேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது. ரீல்ஸ், புகைப்படங்கள் என பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளது இன்ஸ்டா.  205.4 மில்லியன் டவுன்லோடுகள் என இன்ஸ்டா முதலிடம். இதன் வளர்ச்சி என்பது 62% ஆகும். 


Facebook
சோஷியல் மீடியாக்களின் ராஜா என்று சொல்லப்படக்கூடிய பேஸ்புக் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதுவும் இன்ஸ்டாவும் ஒரே நிறுவனம் தான்.  163.6 மில்லியன் டவுன்லோடுகளை பேஸ்புக் பெற்றுள்ளது. இதன் வளர்ச்சி 10.60% ஆகும்


Meesho
இகாமர்ஸ் செயலியான Meesho மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.  162.7 மில்லியன் டவுன்லோடுகளை இது பெற்றுள்ளது. இதன் வளர்ச்சி அசுர வளர்ச்சி. 464.20% வளர்ச்சியை இது பெற்றுள்ளது.


Snapchat
வீடியோ பதிவிடும் செயலி வகையை சேர்ந்த Snapchat நான்காவது இடத்தை பிடித்துள்ளது. வீடியோ பதிவிடும் அதனை சோஷியல் மீடியாக்களை பகிர்வதுமான இந்திய மக்களின் ஆர்வமே இந்த செயலியின் வளர்ச்சிக்கு காரணம்.155.8 மில்லியன் டவுன்லோடு பெற்று இது 4வது இடத்தில் உள்ளது. இதன் வளர்ச்சி 63.90% ஆகும்.


MX Taka Taka
இதுவும் ஷார்ட் வீடியோ வகை செயலிதான். இது 133.7 மில்லியன் டவுன்லொடுகளை பெற்று 5 வது இடத்தில் உள்ளது. இதன் வளர்ச்சி என்பது 64.50% ஆகும்


Josh:
டெய்லிஹண்ட் தாய் நிறுவனமாக  VerSe வின் நிறுவனம் ஜோஸ். இதுவும் ஷார்ட் வீடியோ செயலி தான். 59.90% வளர்ச்சி கண்டுள்ள இந்நிறுவனம் 2021ம் ஆண்டில் 125.2மில்லியன் டவுன்லோடுகளை பெற்றுள்ளது.


Moj:
ஷார்ட் வீடியோ டைப் செயலியான மோஜ் 7வது இடத்தை பிடித்துள்ளது. இது 121.9 மில்லியன் டவுன்லோடுகளை பெற்றுள்ளது.  இதன் வளர்ச்சி 28.50% ஆகும்.Ludo King:
ஷார் வீடியோ செயலிகளை தொடர்ந்து விளையாட்டு தொடர்பான செயலிகள் இடம் பிடித்துள்ளன. அதன்படி Ludo King 8வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மொத்த டவுன்லோடு 121.1 மில்லியன்.  இதன் வளர்ச்சி என்பது சரிவு தான். -8.50% சரிவை சந்தித்துள்ளது.


Flipkart:




115.2 மில்லியன் டவுன்லொடுகளை பெற்று ஆன்லைன் ஷாப்பிங் செயலியான பிளிப்கார்ட் 9வது இடத்தை பிடித்துள்ளது.  இதன் வளர்ச்சி 23.3% ஆகும்.


Playit:
வீடியோ ப்ளேயரான Playit பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. 105.1 மில்லியன் டவுன்லோடுகளை இது பெற்றுள்ளது. இதன் வளர்ச்சியும் அசுர வளர்ச்சி தான். 123. 60% ஆகும்.


Source:Sensortower


கணக்கெடுக்கப்பட்ட காலம்: Jan 1 -Dec 15