இந்தியாவில் விரைவில் 5ஜி இணைய சேவைகள் அறிமுகமாக உள்ளன. இந்நிலையில், அதன் விலை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளது. இது தொடர்பாக எக்னாமிக் டைம்ஸ் டெலிகாம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 5 ஜி சேவைக்கான கட்டணம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுள்ளது. 


காரணம் என்ன:


5ஜி திட்டங்கள் பயனர்களுக்கு அதிக செலவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய தொழில்நுட்பத்திற்கு அதிகமான வாடிக்கையாளார்களை  ஈர்ப்பதற்காக ஸ்மாட் ஃபோன் தயாரிப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 4ஜி நெட்வொர்க்கை விட 10 மடங்கு வேகமான டேட்டா வேகத்தைப் பெறலாம். ஆனால் இப்போது, ​​​​உங்கள் 5G ஸ்மார்ட்போனில் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்த நீங்கள் பெரிதாகச் செலவழிக்க வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த, ஸ்மாட்ஃபோன் பிராண்டுகள் ஒரு புத்திசாலித்தனமான உத்தியை உருவாக்கி வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வாரத்தில் வெளியிடப்பட்ட ET Telecom இன் புதிய அறிக்கையின்படி, ரியல்மீ (Realme) போன்ற பிராண்டுகள் ஏர்டெல் (Airtel)உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி டேட்டா திட்டத்துடன் கூடிய 5ஜி  ஸ்மாட்ஃபோன்களை அறிமுகம் செய்ய உள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு 5ஜி டேட்டா திட்டத்தின் அதிக செலவை ஈடுசெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டவுடன், வரவிருக்கும் மாதங்களில் ஏர்டெல் 5ஜியுடன் மலிவு விலையில் சி-சீரிஸ் 5ஜி போனை Realme சந்தைக்குக் கொண்டு வரலாம் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம்களைப் பெறுவதற்கு அதிக முதலீடு செய்த தொலைபேசி தயாரிப்பாளருக்கும் தொலைத்தொடர்பு ஆபரேட்டருக்கும் இத்தகைய நடவடிக்கைகள் வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளனர்.


மிகவும் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போனுக்காக ஜியோ-கூகுளுடன் இணைந்து செயல்படுவதை நாங்கள் ஏற்கனவே அறிவோம்.  அதைப் பற்றி இப்போது எங்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும். ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விலையுயர்ந்த 5ஜி ஸ்மாட்ஃபோன்கள், 5ஜி திட்டங்களுடன் இணைந்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு தொகுப்பாக மாறும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.


5ஜி முதலில்  பெருநகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் ஜியோ போன்ற நிறுவனங்கள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளன.  ஏர்டெல் மற்றும் வோடஃபோன், ஐடியா இன்னும் 5ஜி சேவைகள் அறிமுகம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 


 மொபைல் நெட்வொர்க்கில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே 5ஜி சேவையின் அனுபவத்தை மக்கள் உணர்ந்து பயன்பெற ஜியோ எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் மெட்ரோ நகரமான மும்பையில் திறக்கப்படவுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.