கூகுள் உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது. அதற்கு எல்லாம் தெரியும். எப்படி என்கிறீர்களா? கூகுள் பற்றிகூட நமக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களை பற்றி கூகுளுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் தற்போது எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்கிறீர்கள், நேற்று எங்கு சென்றீர்கக், ஒரு மாதம் முன்பு, வருடம் முன்பு எங்கெங்கு சென்றீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், நீங்கள் போன மாதம் என்ன செய்தீர்கள் என்பது வரை, நம்மைப் பற்றி கூகுளுக்கு எல்லா விஷயங்களும் நன்றாக தெரியும்.


தடுப்பதற்கு வழி உண்டு


உங்களுக்கு மறந்திருந்தால் கூட அதனிடம் கேட்கலாம். உலகின் மிகப்பெரிய இன்டர்நெட் சேவை தரும் கூகுள் ஒவ்வொரு யூசர்களின் கணக்குகளையும் தனித்தனியாக கையாண்டு வருகிறது. கூகுளில் நாம் தேடுவதில் இருந்து நமது மொபைலில் நாம் பார்க்கும் விளம்பரம், வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களையும் ‘கூகுள்’ பதிவு செய்கிறது. நாம் எதை விரும்புகிறோம் என்பதை அறிந்துகொண்டு நமக்கு ஏற்றாற்போல விளம்பரங்கள் கொடுப்பதை நாம் அடிக்கடி கண்டிருப்போம். அதே போல அதற்கு நமக்கு என்ன வேண்டும் என்பது வரை தெரியும். இதெல்லாம் அதற்கு தெரிவது ஒரு சில விஷயங்களில் வசதி என்றாலும், பல விஷயங்களில் நம்மை அச்சுறுத்துகிறது. நமக்கு வேண்டியதை கொண்டு வந்து விளம்பரங்களாக காட்டி நம் காசை கரைப்பது ஒரு சாதாரண பிரச்னைதான். இன்னும் இன்னும் பெரிய பிரச்சனைகள் அதிலிருந்து நமக்கு வரலாம். அது சேகரிக்கும் தரவுகள் சிலருக்கு கிடைப்பதால் அதன் மூலம் நமக்கு பல பிரச்சனைகள் வரலாம். நம் தரவுகள் தவறாக பயன்படுத்தப் படலாம். அதை தடுப்பதற்கு ஒரு வழி உள்ளது. கூகுளை நம்மை கண்காணிக்க வேண்டாம் என்று கூறி தடுக்க வழிகள் உள்ளன. அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை அப்படியே செய்தாலே போதும்.



கணினியிலிருந்து 'do not track' (கண்காணிக்க வேண்டாம்) என்ற கோரிக்கையை அனுப்புவதற்கான செயல்முறை:



  • முதலில், நாம் கணினியைத் திறந்து, பின்னர் Google Chrome இணைய உலாவியைத் திறக்க வேண்டும்.

  • அடுத்து, திரையின் மேல் வலது புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

  • பின்னர் அதன் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, ப்ரைவசி அண்ட் சேஃப்டி செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

  • பின்னர் 'Cookies and other site data (குக்கீஸ் மற்றும் அண்ட் அதர் சைட் டேட்டா' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • பிரவுசிங் ட்ராஃபிக்கை (Browsing Traffic) ஆன் அல்லது ஆஃப் செய்யும்போது, ​​நாம் கண்காணிக்க வேண்டாம் (Do Not Track) என்ற கோரிக்கையைக் கிளிக் செய்ய வேண்டும்.

  • கோரிக்கைகளை கண்காணிக்க வேண்டாம் என்பதை இயக்குவது என்பது browsing traffic உடன் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.



Android மொபைலில் இருந்து Do Not Track (கண்காணிக்க வேண்டாம்) கோரிக்கையை அனுப்புவதற்கான செயல்முறை:



  • முதலில், நாம் Android சாதனத்தில் Google Chrome இணைய உலாவியைத் திறக்க வேண்டும்.

  • திரையின் மேல் வலது புறத்தில், 3 புள்ளிகள் இருக்கும், அந்த 3 புள்ளி ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.

  • அதன்பின் செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, ப்ரைவசி அண்ட் சேஃப்டி செட்டிங்ஸ் ஆப்ஷனை கண்டறிய வேண்டும்.

  • நாம் 'Do Not Track' (கண்காணிக்க வேண்டாம்) ஆப்ஷனை கிளிக் செய்து செட்டிங்ஸை இயக்க வேண்டும்.

  • இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் ஆண்ட்ராய்டு சாதனங்கள் அல்லது கணினிகள் போன்றவற்றில் உலாவும்போது நமது உலாவல் தரவைச் சேகரிக்க வேண்டாம் என்று இணையதளங்களுக்கு கோரிக்கையை அனுப்பலாம்.