இதோ அதோ என... அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்னும் நான்கு நாட்களில்  தொடங்கவிருக்கிறது. விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, தற்போது 6 வது சீசனை எட்டியுள்ளது. 


கடந்த 5 சீசன்களுமே பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்தன. அதற்கு காரணம், அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் தான். பொதுவாகவே பிரபலமான, நேர் எதிர் மறையான நபர்களை தேர்வு செய்து, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி, அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு. அந்த வகையில், இந்த ஆண்டும், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை பிரபலமாக்கும் போட்டியாளர்கள் தேர்வு முடிந்து, நிகழ்ச்சியும் தயார் நிலையில் உள்ளது. 






நேற்றைய நிலவரப்படி பங்கேற்கும் சில முக்கிய பிரபலங்களின் பெயர்கள் வெளியாகின. அதில் இருக்கும் பெயர் பட்டியலை வைத்து பார்க்கும் போது, இன்னும் சிறப்பான நிகழ்ச்சியாக இந்த சீசன் 6 இருக்கப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது. அந்த வகையில், 


ஜி.பி.முத்து


Fatman ரவீந்தர்


நடிகை ஷில்பா மஞ்சுநாத்


விஜய்டிவி மைனா


பாடகி ராஜலட்சுமி


சீரியல் நடிகை ஆயிஷா


VJ மகேஸ்வரி


அமுதவானன்


மதுரை முத்து


டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்


நடிகை விசித்ரா


சீரியல் நடிகை ஸ்ரீநிதி


மணிகண்டன்(ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பி) 


ஆகியோரின் பெயர்கள் முதற்கட்டமாக வெளியாகின. இவை கூட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், இன்னும் சிலரின் பெயர்களும் இதில் இடம் பெறும் எனத் தெரிகிறது. 15 முதல் 18 பேர் வரை இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் என தெரிகிறது. அந்த வரிசையில், பிரபல சினிமா விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 






அமெரிக்காவில் இருந்து பணியாற்றியபடி, சினிமா விமர்சனங்களை உடனுக்குடன் வழங்கி வரும் கிறிஸ்டோபர், சினிமா மூலம் சமூகவலைதளங்களில் அறியப்படுகிறார். அவரை பெரும்பாலானோர் பின் தொடரும் நிலையில், கடந்த ஆண்டு சீசனில் சினிமா விமர்சகர் அபிஷேக் சென்றதால் , இந்த முறையும் அந்த கோட்டாவின் படி, கிறிஸ்டோபர் கனகராஜிற்கு வாய்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது.


இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‛வெல்வோம்’ என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். சிலர், இது பொய்யான தகவல் என்றும், முன்கூட்டியே யாரும் இப்படி அறிவிக்கமாட்டார்கள் என்றும் பதில் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால், அதற்கு கிறிஸ்டோபர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே நேரத்தில், ‛ஜிபி முத்து இருக்கிறாரா...’ என்று சிலர் கேள்வி எழுப்ப, அதற்கு ‛உண்டு’ என்றும் பதிலளித்திருக்கிறார்.