இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான சோதனையை துவங்கி இருக்கின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது.


ஏர்டெல் நிறுவனம் மற்றும் நாட்டின் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 5ஜி சோதனையை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் குருகிராமில் 3.5GHz பேண்ட் மூலம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது.


ஏர்டெல் 5ஜி சோதனையில் 1Gbps வேகத்தில் டவுன்லோட் வேகம் கிடைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும்இதை உறுதி செய்யும் வகையில் ட்விட்டர் தளத்தில் வெளிவந்த வீடியோவில், ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி 1Gbps டவுன்லோட், 100Mbps அப்லோட் வேகம் வழங்குவதாக விளம்பர படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் எரிக்சன் மற்றும் நோக்கியாவின் உபகரணங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறன்றன. அதுவும் ஒரு சில நிறுவனங்கள் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஐந்தாம்தலைமுறைக்காக அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தைகொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.


5ஜி சேவை என்று கூறப்படும் போது முதலில் நாம் நினைப்பது வேகம் தான், அதன்படி Gigabits-per-second (Gbps)வேகத்தில்இன்டர்நெட் பயன்படுத்த முடியும். அதாவது 1ஜி சேவையானது வெறும் கால் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்பட்டது. அடுத்து 2ஜி சேவையான டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டுமே பயன்பட்டது. அதன்பின்பு 3ஜி சேவையில் கால் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்எம்எஸ் என அனைத்தும் பயன்படுத்த முடிந்தது. மேலும் 4ஜி சேவையானது சிறந்த இன்டர்நெட் வேகத்தை கொடுத்தது, இதன் மூலம் வீடியோ கால் அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மிகவும் அருமையாக பயன்படுத்த முடிந்தது.



ஆனால் இனிவரும் 5ஜி சேவையானது 4ஜி விட பல மடங்கு வேகத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் இப்போது பயன்படுத்தும் 4ஜி சேவை ஆனது Mbps வேகத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனவே விரைவில் வரும் 5ஜி சேவையானது வேகமாக இணையத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.


இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 4ஜி வேகத்தில் ஒரு முழு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய 7 அல்லது 8 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த 5ஜி சேவையில் மிகவிரைவில் அதாவது சில வினாடிகளில் டவுன்லோடு செய்ய முடியும்.


5ஜி தொழில்நுட்பத்தினால் என்னென்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள். ஆனால் 5ஜிதொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்துதுறைகளிலும்ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.