இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ தம்பதியினர் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில் பிரபல ஆர்ஜே மஹ்வாஷுடன் சாஹலின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்:
தனஸ்ரீ சாஹல் ஜோடி விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்கிற வதந்தி பரவி வரும் நிலையில், சாஹல் சமீபத்தில் மும்பையில் ஒரு பெண்ணுடன் ஒரு வீடியோவில் காணப்பட்டார். அந்த வீடியோ குறித்த கேள்விகள் இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில். இப்போது, அந்த பெண் வேறு யாருமல்ல, பிரபல RJ-வான மஹ்வாஷ் தான் என்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் எடுத்த புகைப்படங்களை வைத்து இதை நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். மேலும் அவர் மஹ்வாஷை டேட்டிங் செய்வதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது
இதையும் படிங்க: Ravichandran Ashwin : "இந்தி தேசிய மொழி அல்ல" ஆனால்.. ட்விஸ்ட் வைத்த அஸ்வின்.. வைரலாகும் வீடியோ
ஆர்.ஜே மஹ்வாஷ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள படத்தில் சாஹலை தன் குடும்பம் என்று குறிப்பிட்டு "கிறிஸ்துமஸ் லஞ்ச் கான் ஃபேமிலியா" என்ற தலைப்பு நெட்டிசன்களின் ஆர்வத்தைத் தூண்டியது. மேலும் அந்த பதிவின் கம்மெண்ட் பாக்ஸ்சையும் அவர் ஆஃப் செய்து வைத்துள்ளார்
மேலும் இந்த வதந்திகளுக்கு யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஆர்ஜே மஹ்வாஷ் தர்ப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யார் ஆர்ஜே மஹ்வாஷ் யார்?
டெல்லியைச் சேர்ந்த 24 வயதான ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே. மஹ்வாஷ், ஃபேஷன், டிராவல் மற்றும் உடற்தகுதி பற்றிய கண்டெண்ட்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர், அவரது வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அவர் 1.4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களையும் 787K யூடியுப் பார்வையாளர்களையும் வைத்துள்ளார்
இதையும் படிங்க: IND W vs IRE W: 23 வயசுல இப்படி ஒரு திறமையா? தடுமாறிய அயர்லாந்து! தாங்கிப் பிடித்த கேப்டன் கேபி!
நான் உங்கள் ஆதரவைத் தேடுவேன், அனுதாபத்தை அல்ல: சாஹல்
இந்த நிலையில் சஹால் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பகிர்ந்திருந்தார். அதில்
"எனது அனைத்து ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இது இல்லாமல், நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். ஆனால் இந்த பயணம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது!!! என் நாட்டிற்கு வழங்க இன்னும் பல நம்பமுடியாத ஓவர்கள் எஞ்சியுள்ளதால், எனது அணிக்காகவும், எனது ரசிகர்களுக்காகவும் நான் ஒரு மகன், சகோதரன் மற்றும் நண்பன். சில சமூக ஊடகப் பதிவுகள் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம் என்று பேசப்படுவதை நான் கவனித்தேன்.
ஒரு மகனாக, சகோதரனாக, நண்பனாக, எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கும் இந்த யூகங்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது குடும்ப விழுமியங்கள், எப்போதும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய முயலுங்கள், குறுக்குவழிகளை எடுப்பதற்குப் பதிலாக, இந்த மதிப்புகளுக்கு நான் உறுதியாக இருக்கிறேன்.
தெய்வீக ஆசீர்வாதங்களுடன், உங்கள் அன்பையும் ஆதரவையும் பெற நான் எப்போதும் முயற்சிப்பேன், அனுதாபத்தை அல்ல. அனைவரையும் நேசிக்கிறேன்" என்று யுஸ்வேந்திர சாஹல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதினார்.