Pawan Vs Jagan: திருப்பதி மருத்துவமனையில் பவன் கல்யான் மற்றும் ஜெகன் மோகனின் ஆதரவாளர்கள் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர்.


திருப்பதி கூட்ட நெரிசல்:


திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசன டிக்கெட்டை வாங்க பக்கள் அதிகளவில் குவிந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடந்த 8ம் தேதி இரவு ஏற்பட்ட இந்த சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது திருப்பதியில் உள்ள SVIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் எதிர்பாராத விதமாக ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். எதிரெதிர் துருவங்களாக கருதப்படும் இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.



மாறி மாறி முழக்கங்கள்:


முதலில் மருத்துவமனைக்கு வந்த பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் மருத்துவமனை விட்டு வெளியேறாமல், அதே இடத்தில் செய்தியாளர்களை சந்த்திது கொண்டிருந்தார். அப்போது ஜெகன் மோகனின் கார் உள்ளே வந்தது. இதனை கண்டதும் அவரது ஆதரவாளர்கள் பவன் டவுன் டவுன்.. ஜெகன் ஜெய் ஜெகன் ஜெய்.. என மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இருவரின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதான படுத்தி ஜெகனை மருத்துவமனைக்குள் அனுபுவதற்குள் பவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால், இருவரின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மருத்துவாமனை வளாகமே போர்களம் போல காட்சியளித்தது.










நோயாளிகள் அவதி:


மருத்துவமனை என்பதையும் உணராமல் அங்கே அரசியல் கட்சியினர் முழக்கங்களை எழுப்பியது, நீண்ட நேரமாக துணை முதலமைச்சர் மருத்துவமனை வளாகத்திலேயே இருந்தது செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தை ஏற்படுத்தியது போன்ற காரணங்களால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.