இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் "இந்தி தேசிய மொழி அல்ல.. அது அலுவல் மொழி" தான் என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


பட்டமளிப்பு விழா: 


சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் பொற்யியல் கல்லூரியில் 23வது ஆண்டு பட்டமழிப்பு விழா நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை  வழங்கினார் அஸ்வின். 


இதையும் படிங்க: Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி..! பிளேயிங் லெவனில் யார்? கம்பேக் இருக்கா? பும்ரா அவுட்டா?


”இந்தி தேசிய மொழி அல்ல”:


இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன் அங்கிருந்த மாணவர்களிடம் பேச வேண்டும் என்று கேட்டார். ஆங்கிலாத்தில் பேசலாமா, இந்தியில் பேசலாமா அல்லது தமிழில் பேசலாமா என்று மாணவர்களிடம் கேட்ட போது, தமிழ் என்று சொன்ன போது மாணவர்கள் பெரும் கூச்சலிட்டனர். அதே போல் இந்தி என்று சொன்ன மாணவர்கள் மத்தியில் அமைதி நிலவியது. அப்போது பேசிய அஸ்வின் ”இந்தி தேசிய மொழி அல்ல, அது அலுவல் மொழி தான் என்று கூறினார். இதை கேட்ட மாணவர்கள் பலத்த சத்தத்துடன் ஆரவாரம் செய்தனர். 



தொடர்ந்து பேசிய அஸ்வின்  நான் கேப்டன் ஆகாதற்கு காரணம் இன்ஜினியரிங் படித்தது தான். யாராவது என்னிடம் வந்து இதை உன்னால் செய்ய முடியாது என்று கூறினால் அதை நான் உடனடியாக செய்துகாட்டுவேன். உன்னால் முடியும் என்று சொன்னால் அதை அப்படியே விட்டுவிடுவேன். யாராவது என்னிடம் வந்து நீ கேப்டன் ஆகமாட்டாய் என்று சொல்லியிருந்தால் நான் கொஞ்சம் விழித்துக்கொண்டு கேப்டன் ஆகி இருப்பேன். மக்கள் உங்கள் முன்பு வந்து உங்களால் முடியாது என்று சொல்வார்கள். உன்னால் முடியாது என்று சொல்வதற்கு வெளியில் கோடி பேர் இருப்பார்கள். 


அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாதவர்கள், நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் மாணவராக இருக்க வேண்டும், அப்போது தான் நீங்கள் கற்றுக்கொண்டே இருக்க முடியும், நீங்கள் மாணவராக இல்லாவிட்டால் நீங்கள் கற்பது நின்று விடும் என்றார் அஸ்வின்.