2021-ம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பமான மாதிரி இருந்தது, அதற்குள் டிசம்பர் மாதத்தை எட்டிவிட்டோம். டிசம்பர் மாதத்தின் பாதியையும் தாண்டிவிட்டதால், அடுத்த ஆண்டிற்கான திட்டங்கள், ஐடியாக்கள் என ஒரே ‘நியூ இயர்’ மோடிற்கு அனைவரும் வந்துவிட்டோம். விளையாட்டு துறையைப் பொருத்தவரை, இந்த ஆண்டு இந்தியாவுக்கு வெற்றிகரமான ஆண்டாகவே இருந்திருக்கிறது. கிரிக்கெட் மட்டுமின்றி வேறு விளையாட்டுகளிலும் தலைப்புச் செய்திகளை தொட்ட வீரர் வீராங்கனைகள் ஏராளம்.
கிரிக்கெட், ஒலிம்பிக், பாராலிம்பிக் என சர்வதேச விளையாட்டு தொடர்கள் நடைபெற்றன. இதை தவிர, ரசிகர்களை ஈர்க்கும் மற்றுமொரு முக்கிய விளையாட்டுகளில் ஒன்று WWE. பாரம்பரிய விளையாட்டுகளில் இருந்து இது சற்று வேறுபட்டிருந்தாலும், 90ஸ் கிட்ஸ்களின் பள்ளி காலத்தோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!
1. எட்ஜ் - ஜூன் மாத ஸ்மேக்டவுன்
ஸ்மேக்டவுன் நிகழ்ச்சியில் கம்-பேக் தந்த எட்ஜ், அந்த பழைய ஆக்ரோஷத்தோடு வரவில்லை என்றாலும், வந்தவர் ரோமன் ரெயின்ஸை வம்பிழுத்தார். இந்த மொமண்ட்ஸ் 2021 WWE களத்தில் வைரலான ஒன்று.
2. ஜான் சீனா - 2021 மணி இன் தி பேங்க்
யாரும் எதிர்ப்பாராத வகையில், கம்-பேக் தந்த சூப்பர் ஸ்டார் ஜான் சீனா, யூனிவெர்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோமன் ரெயின்ஸ்க்கு எதிராக சவால்விட்டார்.
3. பெக்கி லின்ச் - 2021 சம்மர்ஸ்லாம்
மகளிர் நட்சத்திரங்களில், மிகவும் பிரபலமானவர் பெக்கி லின்ச். ரசிகர்கள் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் போட்டியில் குதித்த பெக்கி, 30 நொடிகள் கூட விளையாடவில்லை, வந்த வேகத்தில் பியாங்கா பெலெய்ரை தோற்கடித்து மகளிர் சாம்பியன்ஷிப் டைட்டிலை தட்டிச் சென்றார் அவர்.
4. ப்ராக் லெஸ்னர் - 2021 சம்மர்ஸ்லாம்
சம்மர்ஸ்லாம் தொடரின் முக்கியமான போட்டிகளுக்கு பிறகு திடீரென களத்தில் இறங்கிய ப்ராக் லெஸ்னர், ரோமன் ரெயின்ஸ்க்கு எதிராக போட்டியிட சவால்விட்டார்.
5. கோல்ட் பெர்க் - 2021
WWE ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பெற்றிருந்த கோல்ட் பெர்க், இந்த ஆண்டு மீண்டும் எண்ட்ரி தந்து WWE சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிடுவதாக ஷாக் கொடுத்தார். அதனை அடுத்து பாபி லஷ்லியுடனான அவரது மோதல் ரசிகர்களை ஈர்த்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்