விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள குறும்பரம் கிராமத்தில் வசித்து வரும் செந்தில்- கோமதி இவர்களின் ஒரே குழந்தைதான் யாஷிகா,  யாஷிகா பிறக்கும்போதே ஒவ்வொரு கையிலும் மூன்று விரல்கள்தான் இருந்துள்ளது,



யாஷிகா வளர வளர வலது கை கொஞ்சம் செயல்படாமல் இருப்பது போல தெரிந்துள்ளது. யாஷிகா வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிறுவர் சிறுமிகள் சிலம்பம் கற்றுக் கொள்வதற்காக பயிற்சிக்கு சென்றனர் அப்பொழுது யாஷிகாவையும் அவரது தந்தை செந்தில் சிலம்பம் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார். வலது கை செயல்படாமல் இருப்பது போல் இருந்தால் சிலம்பம் சுற்றினால் ஏதேனும் ஒரு மாற்றம் வரும் நம்பிக்கையுடன் சிலம்பம் சுற்றுவதற்கு ஐந்து வயதிலேயே சிலம்பம் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர் . இப்போ யாஷிகாவுக்கு ஏழு வயதாகிறது.



 யாஷிகா மூன்று விரல்கள் வைத்துக்கொண்டு எப்படி சிலம்பம் சுற்ற முடியும் என்று நினைக்காமல் எந்தவித தயக்கமும் இல்லாமல் சிலம்பம் சுற்றுவதற்கு கொம்பை கையிலெடுத்துள்ளார். அரசுப்பள்ளியில் கற்றுத் தரும் சிலம்பப்பயிற்சியில் கலந்துகொண்ட யாஷிகாவை முதல் மூன்று மாதம் ஒரு கையை முதுகுக்கு பின்பாக கட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு ஒரு தைத்து மட்டுமே பயிற்சி கொடுத்துள்ளார் பின்னர், அதேபோல மற்றொரு கைக்கும் மூன்று மாதம் பயிற்சி கொடுத்துள்ளார் பயிற்சியாளர். அதுமட்டுமல்லாமல் தினமும் சுமார் 2 மணிநேரம் யாஷிகா வீட்டிலேயே சிலம்பப் பயிற்சியை தொடர்ந்திருக்கிறார்.



சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு யாஷிகா சகஜமாக இரண்டு கைகளாலும் பிடித்து சிலம்பம் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார். அதன்பிறகு குற்றத்தைச் சிலம்பம் சிலம்பம், தீப்பந்தம் விளையாட்டு, சுருளி பட்டை. விளையாட்டு, அலங்கார அடி, பாடம் விளையாட்டு என அனைத்தையும் கற்றுக்கொண்டார்.



கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற சர்வதேச சிலம்பு சம்மேளனம் எனும் அமைப்பு, கொரோனா  காலத்தில் ஆன்-லைன் வழியில் நடத்திய சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் யாஷிகா. தன்னால் முடியாது என்று நினைப்பவன் வெற்றி பெற தவறிவிடுகிறான்.. தன்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து முழு முயற்சியோடு பாடுபடுபவன் வெற்றி பெறுவான் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் யாஷிகா.