கரூரில் வில்வித்தை, கராத்தே, ஸ்கேட்டிங் என மூன்று விளையாட்டுகளில் தொடர்ந்து 2 முதல் 4 மணி நேரம் உலக சாதனை படைத்த 15 பேருக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது. 


 




கரூர், ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மைதானத்தில் வில்வித்தை, கராத்தே, ஸ்கேட்டிங் என மூன்று வெவ்வேறு விளையாட்டுகளில் 15 பேர் கலந்துகொண்ட நிகழ்வில் இந்தியா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 12 மற்றும் 18 வயதுடைய இரண்டு பேர் தொடர்ந்து இரண்டு மணி நேரம் நுஞ்சக் சுற்றிக்கொண்டு கராத்தேவில் சாகசம் நிகழ்த்தினர். வில்வித்தையில் 6 முதல் 21 வயது வரை உள்ள ஏழு பேர் கலந்து கொண்டு, தொடர்ந்து இரண்டு மணி நேரம் 2024 அம்புகளை குறி பார்த்து எய்தனர்.


 


 



 


6 முதல் 14 வயது வரை உள்ள ஆறு பேர் பங்கேற்று தொடர்ந்து நான்கு மணி நேரம் ஸ்கேட்டிங் செய்தனர். பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனரும், பயிற்சியாளருமான கிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலக சாதனை படைத்த 15 பேருக்கும் இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சதாம் உசேன், தீர்ப்பாளர்கள் பிரசன்ன குமார், தினேஷ் குமார் ஆகியோர் பங்கேற்று பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கி கெளரவித்தனர். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண