உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் குகேஷுக்கு தமிழ்க அரசு சார்பில் 5 கோடி ரூபாய் பரிசை அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். 


செஸ் சாம்பியன்ஷிப் தொடர்: 


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைப்பெற்றது, இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சீன வீரர் டி லிரேனை எதிர்க்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டி 14 சுற்று வரை நடந்தது. கடைசி சுற்றில் [போட்டியை டிரா செய்ய வேண்டும் லிரேன் போராடினார், ஆனால் குகேஷ் கொடுத்த நெருக்கடியால் லிரேன் 53 வது நகர்த்தலில் பெரிய தவறு ஒன்றை செய்தார். 


இதை பயன்படுத்திக்கொண்ட குகேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் என்கிற சாதானையை குகேஷ் படைத்தார்.


குவிந்த பாராட்டுக்கள்:


குகேஷ் வெற்றி பெற்றததை அடுத்து அவருக்கு இந்தியாவின் பல்வெறு பகுதிகளில் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது, குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தங்கள் வாழ்த்துக்களை குகேஷூக்கு தெரிவித்தனர். மேலும் வெற்றி பெற்ற குகேஷூக்கு 11.45 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது






பரிசுத்தொகை:


சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் , குகேஷின் மகத்தான சாதனையை கௌரவிக்க மிக இளைய உலக செஸ் சாம்பியன், ₹5 கோடி ரொக்கப் பரிசை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! அவரது வரலாற்று வெற்றி தேசத்திற்கு மகத்தான பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. அவர் தொடர்ந்து பிரகாசிக்கவும், எதிர்காலத்தில் பெரிய உயரங்களை எட்டவும் வேண்டும், குகேஷூக்கு உறுதுணையாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதிக்கும், தமிழ்நாடு விளையாட்டு துறையும் இளம் நட்சத்திரத்தை வளர்ப்பதில் காட்டிய ஆதரவு மற்றும் ஊக்கத்திற்காக பாராட்டுக்கள் என முதல்வர் ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்..






முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: 


வாழ்த்துக்கள் குகேஷ், 18 வயதில்  இளைய உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளீர்கள்! உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக, அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது! என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியிருந்தார்.