உலக மகளிர் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தினை 50 கிலோ எடைப் பிரிவில் நிகாத் ஜரின் வென்றுள்ளார்.  ஏற்கனவே நிது கங்காஸ்  48 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். அதன் பின்னர், உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 81 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீட்டி போரா இந்தியாவுக்காக இரண்டாவது தங்கம் வென்றார்.