உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஆண் நீளம் தாண்டுதல் வீரர் என்ற பெருமையை முரளி ஸ்ரீசங்கர் பெற்றார்.


இந்த சீசனில் இதுவரை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முரளி ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலில் 8 மீ தூரம் பாய்ந்து இந்திய வீரர்களான ஜெஸ்வின் ஆல்ட்ரின் (7.79 மீ) மற்றும் முஹம்மது அனீஸ் யாஹியா (7.73 மீ) ஆகியோரை முந்தி நேரடியாக போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.


சீசனின் டாப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஒரு பதக்கத்திற்கான சாம்பியன்ஷிப்பில் நுழைந்த ஸ்ரீசங்கர், தனது இரண்டாவது முயற்சியில் சரியாக 8 மீ பாய்ந்து தகுதிச் சுற்றில் குரூப் பியில் இரண்டாவது இடத்தையும், ஒட்டுமொத்தமாக ஏழாவது இடத்தைப் பிடித்தார். 


ஸ்ரீசங்கரால் 8.15 மீ என்ற இலக்கை தொட முடியவில்லை என்றாலும் 12 சிறந்த செயல்திறன் கொண்டவர்களில் ஒருவராக இறுதிப் போட்டிக்கு வந்தார். 23 வயதான அவர் ஏப்ரலில் நடந்த ஃபெடரேஷன் கோப்பையில் தனது 8.36 மீ தாண்டி தனது திறமையை வெளிபடுத்தினார். அதைத் தொடர்ந்து கிரீஸ் மற்றும் தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகளில் முறையே 8.31 மீ மற்றும் 8.23 மீ தூரம் பாய்ந்தார். 


தகுதிச் சுற்றில் ஜப்பானின் யுகி ஹஷியோகா (8.18 மீ) மற்றும் அமெரிக்காவின் மார்க்விஸ் டெண்டி (8.16 மீ) ஆகியோர் மட்டுமே 8.15 மீட்டர்களைத் தாண்டினர்.


ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸின் மில்டியாடிஸ் டென்டோக்லோ (8.03 மீ), ஸ்ரீசங்கரை விட குரூப் பி தகுதிச் சுற்றில் வென்றார், உலக சீசன் தலைவர் சுவிட்சர்லாந்தின் சைமன் எஹம்மர் (8.09 மீ), கியூபாவின் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மைக்கல் மாசோ (7.93 மீ) ஆகியோரும் இறுதி போட்டியில் இடம் பெற்றனர்.






இதற்கு முன்னதாக, அஞ்சு பாபி ஜார்ஜ் உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் முதல் இந்திய வீராங்கனையாகவும், 2003 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்தை வென்ற முதல் வீரராகவும் இருந்தார்.


அதேபோல், இந்தியாவின் ராணுவ வீரர் அவினாஷ் சேபிள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் 8:18.75 வினாடிகளில் இலக்கை எட்டி நேரடியாக தகுதி பெற்றார். அவர் தனது ஹீட்ஸின் போது மூன்றாவது இடத்தைப் பிடித்து பதக்கச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண