உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 3000 மீ. ஸ்டீப்பிள் சேஸ் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
புடாபெஸ்டில் நேற்று நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் இறுதிப் போட்டிக்கு இந்திய ஸ்டீப்பிள் சேசர் பருல் சவுத்ரி தகுதி பெற்றார். 28 வயதான அவர் இரண்டாவது ஹீட்ஸில் 9:24.29 வினாடிகளில் கடந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தில் நடந்த ஆசிய தடகள சாமியன்ஷிப் போட்டியில் பருல் சவுத்ரி 9:38.76 வினாடிகளில் அடைந்து ஆசிய பட்டத்தை வென்றார். கடந்த 2015 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவருக்கான 5000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் காமன்வெல்த் நட்சத்திரம் அவினாஷ் சேபிள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஜெஸ்வின் ஆல்ட்ரின்:
நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டி தகுதிச்சுற்றில் 8 மீ தூரம் பாய்ந்து நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 12வது இடத்தை பிடித்தார். மற்றொரு நீளம் தாண்டுதல் வீரரான முரளி சங்கர் 7.74 மீ பாய்ந்து தகுதிச் சுற்றில் 22வது இடத்தை பிடித்தார்.
ஆண்களுக்கான 35 கி.மீ பந்தய நடைப் போட்டியில் ராம் பாபூவும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரினும் இறுதிப்போட்டியில் களமிறங்குவார்கள்.