தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான T20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சுனே லூயிஸ் 28 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 




113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தார். அதிரடியாக விளையாடிய ஷபாலி, 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 2 ரன்கள் மட்டுமே ஓடி எடுத்த அவர், மற்ற 58 ரன்களையும் பவுண்டரிகள் மூலமே குவித்தார். 


இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் மந்தனா 48 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு, இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. தொடர் நாயகி விருதை ஷபாலி வர்மாவுக்கும் ஆட்ட நாயகி விருது ராஜேஸ்வரி கெய்க்வாட்டிற்கும் வழங்கப்பட்டது.