அண்டை நாடான இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐக்கிய நாடுகளின் சபையில் நேற்று நிறைவேறியது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு, அந்நாட்டு அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பை அப்போது இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.


அதேபோல பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உலக அளவில் 22 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. டென்மார்க், பிரான்ஸ், பிஜி ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஐ.நா-வில் தற்போது இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. 


உள்நாட்டுப்போரில் நடைபெற்ற அனைத்து மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க இந்த தீர்மான உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் மிகமுக்கிய நிகழ்வாகவும் தற்போது இது பார்க்கப்படுகிறது.