இந்திய சைக்கிளிங் விளையாட்டு பிரிவு வீரர் வீராங்கனைகளுக்கு ஸ்லோவேனியா நாட்டில் ஒரு பயிற்சி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆசிய சைக்கிளிங் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்பிற்காக அந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 


புகார் அளித்த வீராங்கனை:


இந்நிலையில் இந்த முகாமில் பயிற்சியாளர் ஆர்.கே.சர்மா தவறாக நடந்து கொண்டதாக சைக்கிளிங் வீராங்கனை ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக இந்திய சைக்கிளிங் சம்மேளனம், “இந்திய சைக்கிளிங் பயிற்சியாளர் ஆர்.கே.சர்மா தொடர்பாக வீராங்கனை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.ஸ்லோவேனியாவில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் வந்துள்ளது.


இந்த பாலியல் புகார் தொடர்பாக சைக்கிளிங் சம்மேளனம் இந்திய விளையாட்டு ஆணையத்திடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க இந்திய விளையாட்டு ஆணையம் அமைத்துள்ள குழுவிற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்” எனத் தெரிவித்துள்ளது. 


 


இந்திய வீராங்கனை அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரிக்க விளையாட்டு ஆணையம் ஒரு குழுவை அமைத்துள்ளது. மேலும் சைக்கிளிங் சம்மேளனம் சார்பிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த வீராங்கனையை உடனடியாக சைக்கிளிங் சம்மேளனம் இந்தியா அழைத்து வந்துள்ளது. அவருக்கு உரிய ஆதரவை அளிக்க போவதாக சைக்கிளிங் சம்மேளனம் தெரிவித்துள்ளது.  மற்ற வீரர்கள் அனைவரும் வரும் ஜூன் 14ஆம் தேதி ஸ்லோவேனியாவிலிருந்து நாடு திரும்ப உள்ளனர். சைக்கிளிங் பயிற்சியாளர் மீது வீராங்கனை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்:




ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் இந்தியாவில் நான்காவது முறையாக நடைபெற உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 6 வெண்கலம் வென்று இருந்தது. இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ள ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் தொடரில் 20 நாடுகளை சேர்ந்த 500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் இதற்கு முன்பாக 2004,2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண