மதுரை K.புதூர் பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் பாரதியார் ரோடு பகுதியில் சொந்தமாக அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு அடகு கடைக்கு வந்த மர்ம கும்பல் அடகு கடையின் பூட்டை உடைத்து அடகு கடையில் இருந்த நகையை கொள்ளை அடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருப்பினும் லாக்கரை உடைக்க முடியாததால் அலேக்காக தூக்கிக் கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்று மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலை நேற்று சுத்தம் செய்ய வந்த மாநகராட்சி ஊழியர் லட்சுமி மற்றும் முத்து லாக்கர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லாக்கரை கைபற்றினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட அந்த பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். மேலும் குப்பைத்தொட்டி லாக்கர் இருப்பதைக் கண்டவுடன் துரிதமாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் மாநகராட்சி ஊழியர்கள் லட்சுமி மற்றும் முத்து ஆகியோரை காவல்துறையினர் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
அதே போல் சதுரங்க வேட்டை பட பாணியில் இருடியம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த பிரபு இவர் கொடைக்கானலில் பிரபல தனியார் விடுதி நடத்தி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமாயன், மணிகண்டன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 பேரும் தங்களிடம் அரியவகை இரிடியம் இருப்பதாக கூறி ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களின் செயலை சந்தேகப்பட்ட பிரபு ஊமச்சிகுளம் காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து மறைந்திருந்த தனிப்படையினர் இவர்களை ஐயர் பங்களா பகுதியில் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் இரிடியம் இருப்பதாக கூறி நூதன முறையில் பலரிடம் இவர்கள் மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
’ இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - ‛பாஜக காக்கா கூட்டம்... பதவிக்கு ஓடும் அண்ணாமலை...தனித்து நிற்க அதிமுக தயார்’ -செல்லூர் ராஜூ தாக்கு!