விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தனது முதல் விம்பிள்டன் பதக்கத்தினை வென்றிருக்கிறார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா. 


லண்டனில் நடந்து வரும் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் விளையாட்டுப் போட்டியின் பெண்கள்  ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா ஆகியோர் தங்களது முதல் விம்பிள்டன் பட்டத்திற்காக மிகவும் கடினமாக விளையாடினர்.   இதில் உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை, உலகத் தரவரிசையில் 23ம் இடத்தில் உள்ள 23 வயதான கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனை எலினா ரைபகினா எதிர் கொண்டார். 






இப்போட்டியில் வெல்வது யாராக இருப்பினும் அவர்கள் தங்களின் முதல் விம்பிள்டன் பதக்கத்தினை வென்று, விம்பிள்டன் வரலாற்றின் வெற்றிப் பக்கத்தில் இடம் பெறுவார்கள் என்று இருந்ததால், விம்பிள்டன் ரசிகர்களிடையேயும், இரு நாட்டு மக்களிடையேயும் பெரும் எதிபார்ப்பினை தூண்டியது. இப்படியான பெரிய எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு களமிறங்கிய இரண்டு வீராங்கனைகளும், போட்டி தொடங்கியது முதல் மிகவும் ஆக்ரோசமாக விளையாடினர்.  அரங்கம் நிறைந்த ரசிகர்களைக் கொண்ட இப்போட்டி, மிகவும் விறுவிறுப்பாக சென்றது.  இந்த போட்டியில், மிகவும் துல்லியமாக விளையாடிய  கஜகஸ்தானின் எலினா ரைபகினா 3-6,6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் தனது தாய் நாட்டிற்கு முதல் விம்பிள்டன் பதக்கத்தினை வென்று தருகிறார் எலினா ரைபகினா. 


இரண்டாம் இடம் பிடித்த துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர், நான் என்னுடைய அடுத்த தலைமுறையினருக்கு ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பேன் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண