இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை முழுவதையும் சுற்றிவளைத்தனர். போராட்டக்காரர்களை பார்த்து பயந்துபோன இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடினார். 


அதேபோல், காலே மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்றும் வரும் மைதானத்தை சுற்றிலும் இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  இருப்பினும் போராட்டக்காரர்கள் மைதானத்திற்கு உள்ளே செல்லாததால் இலங்கை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் இந்த போட்டி நடப்பதிலும் விரைவில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தநிலையில், இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், ”இலங்கை பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. 






அற்புதமான மனிதர்களைக் கொண்ட ஒரு நம்பமுடியாத நாடு என்று நான் சொல்ல வேண்டும். இருப்பினும், இலங்கையில் அன்றாட வாழ்க்கை இந்த நேரத்தில் கடினமாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் கஷ்டங்களை நினைக்கும்போது மனசு உடைக்கிறது. 


இலங்கையில் வசிக்கும் மற்றும் யுனிசெப்பின் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் கவுசலா மற்றும் சதுஜா ஆகியோரிடம் நான் சமீபத்தில் பேசினேன். அதற்கு அந்த சிறுமிகள், எரிபொருள் பற்றாக்குறையால் பலர் பள்ளியைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், நாட்டில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இன்னல்களை இரண்டு சிறுமிகளும் விவரித்தனர்.


தற்போதைய பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கிரிக்கெட்டுடன் முழுமையாக ஈடுபடுவதற்கு மைதானத்திற்கு செல்வது எங்களுக்கு சவாலாக உள்ளது. எரிபொருள் நெருக்கடியால், போக்குவரத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயன்படுத்துவதற்கு மிகவும் கடினமாக உள்ளது என்று அவரது பள்ளி மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் கவுசலா கூறினார்.


”ஆசிரியர்கள் தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்கிறார்கள், ஆனால் எரிபொருள் பற்றாக்குறையால், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதில்லை. இதனால், நாங்கள் கற்றுக்கொள்ள சிரமப்படுகிறோம். இப்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி திறந்திருக்கும்," என்று அவர் கூறினார். மேலும், "பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகின்றனர். மீன்பிடித்தலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் எரிபொருள் நெருக்கடியால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. இது மிகவும் கடினம்," என்றும் அந்த சிறுமிகள் தெரிவித்ததாக பாட் கம்மின்ஸ் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 


தொடர்ந்து, யுனிசெப் ஆஸ்திரேலியா தூதரான பாட் கம்மின்ஸ், இலங்கை மக்கள் மற்றும் குழந்தைகள் பொருளாதார நெருக்கடியால் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவ முன் வாருங்கள் என்று வீடியோ வாயிலாக கோரிக்கையும் வைத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண