ஆபாச படம்! செக்ஸ் டார்ச்சர்! உண்மையை மறைக்க பெண்களுக்கு 12 மில்லியன் டாலர்! சிக்கிய WWE வீரர்

WWEல்  புகழ்பெற்ற வின்ஸ் மெக்மஹோன் WWE-ஐச் சேர்ந்த 4 பெண்களுக்கு லஞ்சமாக 12 மில்லியன் டாலர்கள் கொடுத்துவந்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

WWEல்  புகழ்பெற்ற வின்ஸ் மெக்மஹோன் WWE-ஐச் சேர்ந்த 4 பெண்களுக்கு லஞ்சமாக 12 மில்லியன் டாலர்கள் கொடுத்துவந்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

12 மில்லியன் டாலர்கள் லஞ்சம்:

90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை விரும்பி பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி தான் WWE. WWEஐப் பார்க்காமல் யாரும் தங்கள் பால்யத்தை கடந்து வந்திருக்கவே முடியாது என்றே சொல்லலாம். அப்படி WWE-ஐ பார்த்தவர்களுக்கு நன்றாக பரிட்சயமான ஒரு ஆள் வின்ஸ் மெக்ஹோன். WWEன் சேர்மனான வின்ஸ் மெக்மஹோன் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 12 மில்லியன் டாலர்களை WWEஐச் சேர்ந்த பெண்கள் 4 பேருக்கு  மெக்மஹோன் ரகசியமாக கொடுத்து வந்திருக்கிறார் என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.


வாய்வழி உறவுக்கு லஞ்சம்:

அந்த பெண்கள் யார் என்று குறிப்பிடாத வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மெக்மஹோனுக்கும் அந்த பெண்ணுக்கும் உள்ள உறவைப் பற்றி சட்டப்பூர்வமாகப் பேசுவதையோ அல்லது உரிமைகளைகோராவோ கூடாது என்பதற்காக டாலர்களை வாரியிறைத்துள்ளார். அதில் முன்னாள் பெண் சண்டையாளர் ஒருவர் மெக்மஹோனுடன் வாய்வழி உறவு கொண்டதற்காக அவருக்கு 7.5 மில்லியன் டாலர்கள் கொடுத்து அக்ரிமெண்ட் செய்துள்ளார் மெக்மஹோன். ஒரு கட்டத்தில் அந்த பெண் சண்டையாளர் மெக்மஹோனுடன் உறவுக்கு மறுக்கவே அவர் ஒப்பந்த பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

உறவை வெளியில் சொல்லாமல் இருக்க லஞ்சம்:

இவர் மட்டுமல்லாமல் மற்றொரு பெண்ணுக்கும் 1 மில்லியன் டாலர்களை கொடுத்துள்ளார் மெக்மஹோன். அவருக்கும் இந்த தொகையை கொடுத்ததற்கான காரணம் செக்ஸ்தான். அந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை வெளியில் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக இந்த தொகையை அவர் கொடுத்துள்ளார். தனது நிர்வாண மற்றும் ஆபாசப் புகைப்படங்களை WWE காண்ட்ராக்டர் ஒருவருக்க்கு அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கிறார் மெக்மஹோன். அதுவும் வெளியில் தெரிந்துவிடாமல் இருப்பதற்காக அந்த பெண்மணிக்கு ஒரு மில்லியன் டாலர்களை கொடுத்திருக்கிறார் மெக்மஹோன்.


ஆபாசப் படங்களை அனுப்பியதற்காக லஞ்சம்:

இதுவும் இல்லாமல் முன்னாள் WWE பணியாளர் பெண்மணி ஒருவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3 மில்லியன் டாலர்களை ரகசியமாகக் கொடுத்திருக்கிறார். இதுவும் அதே செக்ஸ் பிரச்சனைக்காகதான். இது தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், மெக்மஹோன் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது WWE. அதுமட்டுமல்லாமல் WWE-ன் சேர்மன் மற்றும் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தும் அவரை நீக்கியிருக்கிறது. இந்த பிரச்சனைகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும், எனக்கென்ன என்பது போல ஸ்மேக் டவுன் மற்றும் ரா ஆகிய எபிசோட்களில் கலந்து கொண்டிருக்கிறார் மெக்மஹோன்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola