கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கியமான ஒன்றான விம்பிள்டன் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் நடப்புச் சாம்பியன் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று மகளிர் முதல் சுற்று போட்டிகளும் நடைபெற்றது.
அதில் பிரிட்டன் வீராங்கனை ஜோடி புர்ரேஜ் மற்றும் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ ஆகியோருக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது ஆடுகளத்தில் இருந்த பால் கொடுக்கும் நபர் ஒருவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. அப்போது பிரிட்டன் வீராங்கனை ஜோடி புர்ரேஜ் ஆட்டத்தை நிறுத்திவிட்டு உடனடியாக ஓடி அந்த நபருக்கு உதவினார்.
அதாவது அந்த நபருக்கு தேவையான தண்ணீர் மற்றும் ஜூஸ் ஆகியவற்றை தந்து உதவினார். அதன்பின்னர் மற்றவர்கள் அந்த நபருக்கு உதவி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் ஜோடி புர்ரேஜின் செயலை டென்னிஸ் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்