உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. அனைத்து காலிறுதி போட்டிகளும் முடிந்து அரையிறுதி போட்டிகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன.


நடப்பு கால்பந்து தொடரில் காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக குரோஷியா ஆனது. அந்த அணி காலிறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலை பந்தாடியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.


அரையிறுதியில் அர்ஜென்டீனாவை சந்திக்கிறது குரோஷியா. இந்த ஆட்டம் நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு லுசெயில் மைதானத்தில் நடக்கிறது. மற்றொரு காலிறுதியில் நெதர்லாந்து அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா.


அரையிறுதியில் மொராக்கோவும், பிரான்ஸும் சந்திக்கின்றன. இந்த ஆட்டம் டிச.14 நள்ளிரவு நடக்கிறது. இந்த ஆட்டம் அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இறுதிச்சுற்றுக்குள் இரண்டு அணிகள் மட்டுமே முன்னேறும். 


அர்ஜென்டினா-குரோஷியா எப்படி?
தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 12ஆவது இடத்தில் உள்ள குரோஷியாவுடன் மோதுகிறது.
அர்ஜென்டினா-குரோஷியா அணிகள் மூன்றாவது முறையாக  உலகக் கோப்பையில் சந்திக்கின்றது. அரையிறுதியில் இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறை.


1988இல் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவும், ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 3-0 என்ற கணக்கில் குரோஷியாவும் ஜெயித்தன. 2 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினா, 6 ஆவது முறை பைனலுக்கு முன்னேற ஆவலுடன் இருக்கிறது. இதுவரை அரையிறுதியில் அர்ஜென்டினா தோற்றது கிடையாது.






கடந்த உலகக் கோப்பையில் ரன்னர் அப்பான குரோஷியா நல்ல ஃபார்மில் உள்ளது. அரையிறுதியில் அர்ஜென்டினாவை வீழ்த்தினால் தொடர்ச்சியாக பைனலுக்கு சென்ற 4வது அணி என்ற பெயரை பெரும்.
இதற்கு முன்பு இத்தாலி (1934, 1938), நெதர்லாந்து அணி (1974, 1978), ஜெர்மனி (1982, 1985, 1990) ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகக் கோப்பை பைனலுக்கு முன்னேறியிருக்கிறது.


குரோஷியாவைப் பொருத்தவரை பெனால்டி ஷூட் அவுட் சென்றால் ஜெயித்துவிடுகிறது. எனவே அர்ஜென்டினா கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.


பிரான்ஸ்-மொராக்கோ
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி கடந்த உலகக் கோப்பையில் குரோஷியாவை பைனலில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. நல்ல ஆட்டத்திறனுடன் பிரான்ஸ் உள்ளது.


ஒருவேளை மொராக்கோ ஜெயித்தால் பைனலுக்கு வந்த முதல் ஆப்பிரிக்க அணியாக மாறும்.
பிரான்ஸுக்கு இது 7-வது அரையிறுதி ஆகும்.


Neymar: சர்வதேச போட்டியில் இருந்து விலகுகிறாரா நெய்மர்..? இதுதான் காரணம்..!


இதற்கு முன்பு நடைபெற்ற 6 ஆட்டங்களில் கடைசி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய ஆட்டங்கலில் தோல்வியைச் சந்தித்துள்ளது.


மொராக்கோ அணியைப் பற்றி மற்றொரு சுவாரசியமான தகவல், இந்த உலகக் கோப்பையில் இதுவரை மொராக்கோவுக்கு எதிரா க விளையாடிய எந்தவொரு ஒரு அணியும் ஒரு கோல் கூட போடவில்லை.
கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் மொராக்கோ "செல்ப் கோல்" அடித்ததால் அந்த அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. மற்றபடி இதுவரை எந்தவொரு எதிரணி வீரரும் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த உலகக் கோப்பையில் கோல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மூன்றாவது இடத்திற்கான ஆட்டம்


தோல்வி அடையும் அணிகள் மூன்றாவது இடத்திற்காக டிசம்பர் 17ஆம் தேதி மோதும். அந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு கலிஃபா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. சுவாரசியத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத உலகக் கோப்பை கால்பந்தில் எஞ்சியுள்ள ஆட்டங்களை கண்டு ரசிக்க உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.