சென்னை மேயர் பிரியா ஆணுக்கு நிகராக துணிச்சாலாக பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து, சென்னை காசிமேடு பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய சென்றார். அப்போது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எபனேசர், உள்பட சிலர் தொங்கியபடி பயணித்தனர். இந்த செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
மாண்டஸ் புயல் கடந்த சனிக்கிழமை மாமல்லப்புரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னையில் மிக கன மழை பெய்தது. சென்னையில் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அதேபோல் 200க்கும் மேற்பட்ட மரக்கிளைகளும் விழுந்தன. காற்றின் சீற்றம் காரணமாக 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், 200க்கும் மேற்பட்ட சாலைகள், 15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும் சேதம் அடைந்தன.
சென்னை மாநகராட்சியின் தலைவராக, சென்னை மாநகர மக்களின் தலைவராக உள்ள ஒருவர், கான்வாய் வாகனத்தில் தொடங்கியது படி பயணம் செய்வது, அவரது பதவிக்கும், அந்தஸ்துக்கும் மரியாதை இல்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதுபோல, திறமையான அதிகாரியாகன ககன்தீப் சிங் பேடி, பேடித்தனமாக வாகனத்தில் தொங்கியபடி சென்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய போது, முதல்வர் அடுத்த இடத்தில் ஆய்வுக்கு செல்வதால், அந்த இடத்திற்கு விரைவாக செல்வதற்காக மேயர் இயல்பாக பயணித்தார். அதுவும் பாதுகாப்பு வாகனம். ஆணுக்கு நிகராக துணிசாலாக பெண் பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும். இதை அதிகார துஷ்பிரோயமாக பார்க்க கூடாது என விளக்கமளித்துள்ளார்.
அதே சமயம் மேயர் பிரியாவும் இதற்கு விளக்கமளித்துள்ளார். காசிமேட்டில் இரண்டு இடத்திற்கு ஆய்வு மெற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டாம் இடம் தொலைவில் இருந்ததால் நடந்து சென்றுக் கொண்டிருததாகவும், அந்த வழியாக கான்வாய் வாகனம் சென்றதால் அதில் ஏறி பயணம் செய்ததாகவும் குறிப்பிட்டார்.