பாலாறு பக்கம் இருக்கீங்களா? 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்!

பாலாறு கரையோரம் இருக்கும் 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டிலிருந்து 1724 கன அடி நீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

பாலாறு கரையோரம் இருக்கும் 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டிலிருந்து 1724 கன அடி நீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ”காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை தொடர்ந்து மேண்டஸ் புயல் மற்றும் தொடர்மழை காரணமாக பாலாறு ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து இன்று (12:122022) பிற்பகல் 200 மணியளவில் வினாடிக்கு 1724 கன அடி உபரி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையின் காரணமாக கூடுதலாக பாலாற்றில் தண்ணீர் வரவாய்ப்புள்ளது என பொதுப் பணித் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாற்றின் இடது கரை மற்றும் வலது கரையினை ஒட்டி அமைந்துள்ள, காஞ்சிபுரம் வட்டம், வாலாஜாபாத் வட்டம் மற்றும் வட்டத்தைச் சார்ந்த கீழ்க்கண்ட கிராமங்களைச் சார்ந்த கரையோர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம்

இடது கரை

செவிலிமேடு, ஓரிக்க, சின்னகயப்பாக்கம், பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், ஆளவந்தார்மேடு, விப்பேடு, வெங்கடாபுரம், கோயம்பாக்கம், வில்லிவளம், வெங்குடி, வாலாஜாபாத், பழையசீவரம் ஆகிய பகுதிகளிலும், 

வலது கரை

திருமுக்கூடல், பினாயூர், திருமஞ்சேரி, சாத்தனஞ்சேரி, கலியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை, காவித்தண்டலம் கோழிவாக்கம், புஞ்சையரசன்தாங்கல், வளத்தோட்டம், குருவிமலை, விச்சந்தாங்கல், ஆசூர், அவலூர், அங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுப்பணித்துறை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய் துறை, காவல்துறை மற்றும் பணியாளர்கள் மூலம் பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இரங்க வேண்டாம் எனவும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி போன்றவற்றை செய்ய கூடாது எனவும். கால்நடைகளை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வீட்டில் இருக்கும் சிறுவர் சிறுமிகளை ஆற்றில் அருகில் செல்லாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறும் மாவட்ட நிருவாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

Continues below advertisement