சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஸ்டார் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்பென்சர் ஜான்சனின் பந்துவீச்சு வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணி மோதிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆப்கனிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்பென்சர் ஜான்சனின் யாக்கர் பந்து அவரை பெவிலியனுக்கு அனுப்பியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய ஸ்பென்சர் ஜான்சர், ஆப் ஸ்டெம்பை நோக்கி ஐந்தாவது பந்தை வீசினார். அதை எதிர்கொள்ள முடியாமல் ரஹ்மானுல்லா குர்பாஸ் போல்ட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரின் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை ஜான்சன் கொண்டாடினார். அதோடு, அவர் வீசிய யாக்கர் பந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மிட்சல் ஸ்டார், பும்ரா ஆகியோரின் யாக்கரை போல சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
ஸ்பென்சர் ஜான்சன் முதல் ஓவரில் சில வைட் பந்துகளை வீசினார். ஆனால், அடுத்த பந்து ஸ்டெம்பை நோக்கி வீசினார். ஸ்டெம்ப் பறந்தது. இது மிட்செல் ஸ்டாரிக்கின் யாக்கரை நினைவுப்படுத்துவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மிட்செல் ஸ்டார் யாக்கர் பந்துவீச்சின் மூலம் ஸ்டெம்ப்பை பறக்கவிடும் திறன்மிக்கவர் என கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்ததே..
ஐ.சி.சி. வீடியோ வெளியீடு - மிட்சல் ஸ்டார் பந்து:
ஸ்பென்சர் ஜான்சன் யாக்கர், ஸ்டாக்கின் சூப்பர் யாக்கரை நினைவுப்படுத்தும்விதமாக இருப்பதை ஐ.சி.சி. வீடியோ வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது. ஐசிசி மிட்செல் ஸ்டார்க் , ஸ்பென்சர் ஜான்சன் விக்கெட் எடுத்த விடியோக்களை ஒரே ஸ்கிரீனில் பகிந்துள்ளது. உலக்கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் விளையாடியபோது மிட்சல் ஸ்டார்க்கின் யாக்கர் போட்டியை வெல்ல மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்பதை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.