கியாரா அத்வானி


பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்கள் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா. இருவரும் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷேர்ஷா படத்தில் இணைந்து நடித்தார்கள். இருவருக்கும் காதல் ஏற்பட கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெய்சால்மரில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்கள். திருமணாமாகி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறார்கள். தங்களுக்கு குழந்தை பிறக்கவிருக்கும் தகவலை கியாரா மற்றும் சித்தார்த் தங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்






தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு என தங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தையை குறிப்பிட்டுள்ளார்கள் இந்த தம்பதியினர்.


கியாரா அத்வானி சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தில் நாயகியாக நடித்தார். இப்படம் தோல்வியைத் தழுவினாலும் இனி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கியாரா தொடர்ச்சியாக நடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.