Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் குளிர் மற்றும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென அடுத்த சில தினங்களில், பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் , இன்று மற்று நாளை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று ( 11 மாவட்டங்கள் ):
தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
நாளை ( 01-03-2025 ):
தமிழ்நாட்டில் நாளை தினத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
இந்நிலையில், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் , வானிலை தகவலுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.