பேட்மின்டன் ஆடுகளத்தில் எதிரணி வீரர்களை திணறுடிக்கும் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து தனது நடன திறமைக்கும் பெயர் பெற்றவர் ஆவார்.


முன்னதாக, கச்சா பாதம் மற்றும் மாயகிரியே பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை இதயங்களை வென்ற சிந்து, இப்போது, ​சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மற்றொரு நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் மற்றொரு பாடலின் வரிகளுக்கு ஏற்ப அவர் நடனமாடி இருக்கிறார்.


 






மேலும், "எது உங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்யுங்கள்" என அதில் பதிவிட்டுள்ளார். முதலாவதாக  ‘Head Shoulders Knees and Toes’ பாடலுக்கும் இரண்டாவதாக ‘Gomi Gomi’ பாடலுக்கும் அவர் அசத்தலாக நடனமாடுகிறார். அதில், ஸ்டைலான சன்கிளாஸ் மற்றும் கருப்பு நிற பேண்ட்டை அணிந்திருக்கிறார். பார்ப்பதற்கு செம ஃபிட்டாக தெரிகிறார்.


பகிரப்பட்டதிலிருந்து, இந்த பதிவை 221,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்து உள்ளனர். 


இதற்கிடையில், மலேசிய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டனின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில், சீன தைபேயின் டாய் சூ யிங்கிடம் வெள்ளிக்கிழமை தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண