இந்தியாவில் எம்பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு வருவது வழக்கம். அந்தவகையில் பதவியிலுள்ள எம்பிக்களுக்கு ரயில் பயணம் உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அவர்களுடைய பயணத்திற்கு அரசு சார்பில் சலுகை வழங்கப்படுகிறது. 


இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களும் இலவச ரயில் பயணம் மூலம் அரசிற்கு 62 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் ஆர்டிஐ தகவல் பெற்றுள்ளார். இது குறித்து அவர் மக்களவை செயலகத்திற்கு ஆர்டிஐ விண்ணப்பத்தை அளித்துள்ளார். அதற்கு மக்களவை செயலகம் அளித்த பதிலில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. 




அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் எம்பிக்களின் இலவச ரயில் பயணத்திற்காக 35.21 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. மேலும் முன்னாள் எம்பிக்களின் ரயில் பயணத்திற்கு சுமார் 26.82 கோடி ரூபாய் செலவாகியுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் 2020-21 ஆம் ஆண்டில் எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் தங்களுடைய சலுகை பயன்படுத்தியுள்ளனர். இந்த கொரோனா ஆண்டில் ரயில் பயணத்திற்கு பல்வேறு நபர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டாலும் இவர்களுக்கு மட்டும் சலுகை தொடர்ப்பட்டுள்ளது. கடந்த 2020-21 ஆண்டில் எம்பிக்கள் பயணத்திற்கு 1.29 கோடி ரூபாயும், முன்னாள் எம்பிக்கள் பயணத்திற்கு 1.18 கோடி ரூபாயும் செலவாகியுள்ளது. 


 


கொரோனா காலகட்டங்களில் ரயில் பயணத்திற்கு வயதானவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்து சலுகைகள் நிறுத்தப்பட்டிருந்தது. ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளின்படி மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரை சுமார் 7.31 கோடி முதியவது பயணிக்ளுக்கு இந்தச் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.  ரயில் பயணங்களின் போது எம்பிக்கள் தங்களுடைய துணையுடன் 2 டயர் ஏசியில் இலவசமாக பயணம் செய்யலாம். அப்படி தனியாக ரயிலில் பயணம் செய்யும் பட்சத்தில் அவர்கள் முதல் டயர் ஏசியில் இலவசமாக பயணம் செய்யும் சலுகை உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


இப்படி கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா காராணமாக பொதுமக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எம்பிக்களின் ரயில் இலவச பயணத்திற்கு இவ்வளவு செலவாகியுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண