விஜய் தேவரகொண்டா :


அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் அதிகம் கவனம் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு நடிகரான இவருக்கு ஏகப்பட்ட  ஃபேன்ஸ். விஜய் தேவரகொண்டா தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட போஸ்டர் ஒன்று  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



ஆடைகளின்றி விஜய் தேவரகொண்டா !


பொதுவாகவே அரைகுறை ஆடைகள் அல்லது ஆடைகளின்றி நடிப்பதை bold photoshoot அல்லது bold act  என அழைக்கின்றனர். இதைத்தான் தற்போது விஜய் தேவரக்கொண்டாவும் தனது அடுத்த பட போஸ்டருக்காக செய்திருக்கிறார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் , விஜய் தேவரகொண்டா நடித்து வரும் திரைப்படம்தான் லிகர். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரர். ஆனால் படம் ஒரு காதல் சப்ஜெக்ட் என கூறப்படுகிறது.  இந்த நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்றை  விஜய் தேவரகொண்டா பகிர்ந்திருந்தார். அதில் ஆடைகளின்றி கையில் ரோஜாப்பூக்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார் . மேலும் கேப்ஷனாக " இந்த படம் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துவிட்டது. நடிப்பிலும் , உடலளவிலும் மனதளவிலும் இது எனக்கு சவாலான கதாபாத்திரம் " என குறிப்பிட்டிருந்தார்.







சர்ச்சை :


இந்த புகைப்படம் சினிமா பிரபலங்கள் மற்றும் சில ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் நெட்டிசன்கள்  சிலர் விஜய் தேவரகொண்டாவின் இந்த புகைப்படத்தை வைத்து நக்கலடித்து வருகின்றனர். குறிப்பாக " இந்த படம் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துவிட்டது. " என தேவரகொண்டா எழுதியதற்கு, " ஆடையையும் எடுத்துவிட்டதா அண்ணா " என பலர் நக்கலடித்துள்ளனர்













லிகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இது ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.