காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளான பூஜா கெலாட் (50 Kg), வினேஷ் போகத் (53 Kg), அன்சு மாலிக் (57 Kg), சாக்ஷி மாலிக் (62 Kg), திவ்யா கக்ரன் (68 Kg), பூஜா தண்டா (76 Kg) எடைப் பிரிவுகளில் போட்டியிட தேர்வாகியுள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ் நகரில் நடந்தது. 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் நகரில் நடக்கிறது. ஜூலை 28 to ஆகஸ்ட் 8 வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து பெரும் படையே இதில் கலந்து கொள்ளவுள்ளது. எந்தெந்தப் போட்டியில் யார் யார் கலந்து கொள்கின்றனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளான பூஜா கெலாட் (50 Kg), வினேஷ் போகத் (53 Kg), அன்சு மாலிக் (57 Kg), சாக்ஷி மாலிக் (62 Kg), திவ்யா கக்ரன் (68 Kg), பூஜா தண்டா (76 Kg) எடைப் பிரிவுகளில் போட்டியிட தேர்வாகியுள்ளனர்.
பளுதூக்குதல்:
பெண்கள் 49 கிலோ பிரிவு: மீராபாய் சானு
பெண்கள் 55 கிலோ பிரிவு: பிந்தியாராணி தேவி
பெண்கள் 59 கிலோ பிரிவு: பாப்பி ஹசாரிகா
பெண்கள் 87 கிலோ பிரிவு: உஷா குமாரா
பெண்கள் 87 கிலோவுக்கும் அதிக எடை பிரிவு: பூர்ணிமா பாண்டே
ஆண்கள் 55 கிலோ பிரிவு: சங்கெட் மகாதேவ்
ஆண்கள் 55 கிலோ பிரிவு: சனம்பம் ரிஷிகாந்த் சிங்
ஆண்கள் 67 கிலோ பிரிவு: ஜெரமொ லால்ரினுங்கா
ஆண்கள் 73 கிலோ பிரிவு: அசிந்தா சூலி
ஆண்கள் 81 கிலோ பிரிவு: அஜய் சிங்
ஆண்கள் 96 கிலோ பிரிவு: விகாஸ் தாகூர்
ஆண்கள் 96 கிலோ பிரிவு: ரகள வெங்கட் ராகுல்
பேட்மின்டன்:
மகளிர்: பிவி சிந்து, ஆகாஷ் கஷ்யப், ட்ரீஷா ஜோலி, காயத்ரி கோபிசந்த், அஷ்வினி பொன்னப்பா,
ஆடவர்: லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, பி.சுமீத் ரெட்டி
கிரிக்கெட்:
பிர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவது இது இரண்டாவது முறை. 1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் 50 ஓவர் கொண்ட ஆடவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆனால் இம்முறை பிர்மிங்காமில், முதன் முறையாக மகளிர் டி20 ஃபார்மெட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, பார்படாஸ், இலங்கை உள்ளிட நாடுகளின் அணிகள் பங்கேற்கவுள்ளன.