கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் மக்களுக்கு அந்த நாட்டு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதார சூழல் குறித்து விளக்கம் அளித்து வரும் நிலையில், அந்த நாட்டின் தலைநகர் கொழும்பில் உள்ள காவல்நிலையம் முன்பு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது, அந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதார நிலைமை அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் என்றும், பெட்ரோல் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பில் இருப்பதாகவும், மின்தட்டுப்பாடு 15 மணி நேரமாக இருக்கும் என்றும் கூறியிருப்பது அந்த நாட்டு மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.