யுஎஸ் ஓவன் டென்னிஸ் 2023 ஆடவர் இரட்டையர் பிரிவின் 16வது சுற்றில் இந்திய வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் அவரது ஆஸ்திரேலிய பார்ட்னர் மேத்யூ எப்டன் ஆகியோர் பிரிட்டிஷ் ஜோடியான ஜூலியன் கேஷ் மற்றும் ஹென்றி பாட்டனை வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டன் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி 6-4, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஜூலியன் கேஷ் மற்றும் ஹென்றி பாட்டனை வீழ்த்தியது.






அடுத்த மூன்றாவது சுற்றில் வெற்றியாளர்களான நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப் மற்றும் யுனைடெட் கிங்டமின் நீல் ஸ்குப்ஸ்கி மற்றும் உள்ளூர் ஜோடியான நதானியேல் லாம்மன்ஸ் மற்றும் ஜாக்சன் வித்ரோ ஆகியோருக்கு இடையேயான போட்டியில் வெற்றியாளர்களை ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி எதிர்கொள்வார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூகி பாம்ப்ரி மற்றும் சாகேத் மைனேனி ஆடவர் இரட்டையர் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறினர். 


பெண்கள் ஒற்றையர் பிரிவு:


அதேசமயம், பெண்கள் ஒற்றையர் பிரிவு பற்றி பேசுகையில், உலகின் 10-ம் நிலை வீராங்கனையான செக் வீராங்கனை கரோலினா முச்சோவா 16-வது சுற்றில் சீனாவின் வாங் சின்யுவை வீழ்த்தினார். கரோலினா முச்சோவா 6-3, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வாங் சின்யுவை தோற்கடித்தார். இது தவிர, அமெரிக்க வீராங்கனை கோகோ கோஃப், டேனிஷ் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார். கரோலின் வோஸ்னியாக்கிக்கு எதிரான ஆட்டத்தில் கோகோ காஃப் 6-3,3-6,6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.


கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தோனேஷியாவின் அல்டிலா சுட்ஜியாடியுடன் ஜோடி சேர்ந்த போபண்ணா 2-6 5-7 என்ற கணக்கில் அமெரிக்க ஜோடியான பென் ஷெல்டன் மற்றும் டெய்லர் டவுன்செண்டிடம் 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.






களத்தில் நோவக் ஜோகோவிச்: 


ஆடவர் ஒற்றையர் பிரிவு 16வது சுற்றில், பென் ஷெல்டன் 6–4, 6–3, 4–6, 6–4 என்ற செட் கணக்கில் 14–ம் நிலை வீரரான டாமி பாலைத் தோற்கடித்தார். இது தவிர, நடப்பு சாம்பியனான இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி, ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில், நோவக் ஜோகோவிச் குரோஷியாவின் போர்னா கோஜோவை எதிர்த்து டென்னிஸ் கோர்ட்டில் களமிறங்குவார்.