தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பங்களாப்பட்டி சேர்ந்தவர் அரவிந்த். இவர் அருகே உள்ள தோட்டத்தில் மாட்டு கொட்டகை அமைத்து 20 மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி மாலை 5 மணி அளவில் கால்நடைகளுக்கு தீவனங்கள் போட்டு பராமரிப்பு செய்வதற்காக சென்று உள்ளார்.


Sonia Gandhi: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி.. என்ன நடந்தது?


இந்நிலையில் மாடுகளை பராமரிக்கச் சென்ற கணவர் இரவு 9 மணி ஆகியும் வராத நிலையில் மனைவி ஹேமாவதி அவரது உறவினரான செந்தில்குமார் என்பவரிடம் தெரிவித்த நிலையில் இருவரும் மாட்டு கொட்டகையில்   பார்க்க சென்றதாகவும், அப்பொழுது செந்தில்குமார் மாட்டு கொட்டகை உள்ள தோட்டத்தில் சுற்றி பார்க்க சென்றதாகவும், ஹேமலதா மாட்டு கொட்டகைக்கு பார்க்கச் சென்ற நிலையில் ஹேமலதாவும் மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியாகி உள்ளார்.




மேலும் ஹேமலதா உடன் அரவிந்தை தேட வந்த செந்தில்குமார் வந்து பார்த்த பொழுது ஹேமலதா மற்றும் அவரது கணவர் இருவரும் காணவில்லை என உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மேலும் அங்கு வந்த உறவினர்களில் ஹேமலதா மற்றும் அவரது கணவர் அரவிந்தை தேடிய பொழுது அதில் ஒருவர் செந்தில்குமார் என்பவர் ஹேமலதா மற்றும் அரவிந்த் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த இடத்தில் இருந்த கம்பி வேலியை பிடித்த போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனை தொடர்ந்து அங்கு கூடிய உறவினர்கள் செந்தில்குமாரை காய்ந்த மரக்கம்பை கொண்டு  அவரை மின்சாரம் தாக்கியதில் இருந்து காயத்துடன் காப்பாற்றினர்.


Heath Streak Death: மீண்டும் பொய்யென வரக்கூடாதா? சோகத்தில் கிரிக்கெட் உலகம்! மறைந்தார் ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக்..!




இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டித்து மின்சாரம் தாக்கி காயம் அடைந்த வரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பலியான கணவன் மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதியினருக்கு 5 வயது ஆண் குழந்தையும் 3 வயது பெண் குழந்தைகள் உள்ளது. மேலும் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு குறித்து பெரியகுளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் மின்சார கசிவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.


Sonia Gandhi: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி.. என்ன நடந்தது?