டோக்கியோ பாரலிம்பிக் தொடரின் மூன்றாவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் பவினாபென் விளையாடினார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றதன் மூலம், காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். பிரேசில் வீராங்கனை ஒலிவிரா ஜாய்ஸை எதிர்த்து அவர் போட்டியிட்டார். இந்த போட்டியில் 3-0 என்ற கேம் கணக்கில் பவினாபென் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதனை தொடர்ந்து, இன்று மாலை 3.50 மணிக்கு, செர்பிய வீராங்கனையை எதிர்த்து காலிறுதி போட்டியில் மோத உள்ளார்.


பாராலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர். அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொருத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின்கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். 






Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!


அந்த வகையில்,  பவினா படேல் (C4) க்ரூப்பில் விளையாடுபவர்.  நேற்று நடைபெற்ற போட்டியில், கிரேட் பிரிட்டன் வீராங்கனை மேகனை எதிர்த்து போட்டியிட்ட அவர், 1-3 என்ற கேம் கணக்கில் போட்டியை வென்று அசத்தினார். உலக தரவரிசை பட்டியலில் 12 வது இடத்தில் இருக்கும் பவினா பென், அவரைவிட முன்னிலையில், 9 வது இடத்தில் இருக்கும் மேகனை எதிர்த்து வெற்றி பெற்றது நம்பிக்கை தந்தது. 


பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக ஒரே பாராலிம்பிக் தொடரில் இந்தியா 4 பதக்கங்களை இரண்டு முறை வென்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது. இம்முறை முதல் முறையாக பாரா பேட்மிண்டன் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக் தொடரைவிட மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையிலான வீரர் வீராங்கனைகளை இந்தியா டோக்கியாவுக்கு அனுப்பியுள்ளது. இதனால், பதக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8-12 பதக்கங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Also Read: ப்ளாஷ்பேக்: சிவக்குமார்-ஸ்ரீகாந்த் வாய்ப்பை தட்டிப் பறித்த கமல்-ரஜினி: இப்படி தான் இளமை ஊஞ்சல் ஆடியது!