சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் இந்த இரு அணிகள் தான் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் குறைந்தபட்சம் பைனல் வரை முன்னேறும் திறன் படைத்த அணிகள் என்கிற பெயரை தக்கவைத்தவை. அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு தொடர்ந்து சவால் தருவது சென்னை அணி தான் என்றாலும், பலத்தில் மும்பை அணியும் சாதாரணமல்ல. ரோஹித் சர்மா உள்ளிட்ட அதிரடி பிரபலங்கள் பலரும் அணிவகுத்து நிற்பதால் மும்பை அணியின் கெத்து குறையவே இல்லை. அதே நேரத்தில் இழந்ததை மீட்டது போல, சென்னை அணி இந்த சீரிஸில் தான் ஆடிய முதல் போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்தாலும், பின்னர் தொடர் வெற்றிகளை ருசித்து வருகிறது. அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலம். இதெல்லாம் ஒருபுறம் இருகட்டும். சென்னை சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய போட்டிகள் பற்றிய சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம். 




நேருக்கு நேர்போட்டி- 30
மும்பை - 18 வெற்றி
சென்னை -12 வெற்றி


கடைசி 8  போட்டிகளில்
மும்பை- 6 வெற்றி
சென்னை- 2 வெற்றி


ரெய்னா vs மும்பை
போட்டி-26
ரன்கள்- 699
சராசரி-34.95


பும்ரா vs சென்னை 
போட்டி- 10
விக்கெட்- 8
சிறந்த பந்துவீச்சு- 2/10


ரோஹித் vs சென்னை
போட்டி- 28
ரன்கள்-717
ஸ்ட்ரைக் ரேட்- 124.91


டிரண்ட் பெளல்ட் vs தோனி
பந்துகள்- 38
ரன்கள்-78
விக்கெட்- 2


இப்படி தான் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு அணிகள் மோதும் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால் இன்றைய போட்டியிலும் புதிய புள்ளி விபரங்கள் நமக்கு கிடைக்கலாம்.