பல்கலைக்கழகங்களுக்கு இடையே  மகளிர் கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில்  இருந்து மகளிர் அணியினர் கபடி தொடரில் கலந்து கொள்வதற்காக பஞ்சாப் சென்றிருந்தனர். 

இதில் காலிறுதி போட்டியில் அன்னை தெரசா பல்கலைக்கழகம்  விளையாடியது. அப்போது போட்டி நடுவர் தமிழக வீராங்கணைக்கு தவறாக முடிவு கொடுக்கப்பட்ட நிலையில் தமிழக வீராங்கணைகள் வாக்குவாதம் செய்த நிலையில் அது கைக்கலப்பாக மாறியது.  இந்த விவகாரத்தில் உடனடியாக தமிழக அரசு பஞ்சாப் மாநில அதிகாரிகளிடம் பேசி மாணவிகளுக்கு பாதுக்காப்பு வழங்குவதை உறுதி செய்தனர். 

அதன் பிறகு வீராங்கணைகள் அனைவரும் பஞ்சாப்பில் இருந்து பாதுக்காப்பாக மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் கபடி வீராங்கணைகள் அனைவரும் ரயில் மூலம் சென்னைக்கு பத்திரமாக திரும்பினர். 

பஞ்சாப்பில் நடந்தது என்ன?

சென்னை திரும்பிய கபடி வீரங்கணைகள் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது பஞ்சாப்பில் என்ன நடந்தது என்பதை அவர்கள் விலாவாரியாக செய்தியாளர்களிடம் விளக்கினர். வீராங்கணை ஒருவர் பேசுகையில் இந்த தாக்குதல் சம்பவம் நடைப்பெற்ற உடன் எங்கள் பயிற்சியாளர் எங்களை அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு உடனடியாக அமைச்சர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க்பட்டது, எதாவது மன்னிப்பு கடிதம் எழுதினீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த வீராங்கணை, காவல்நிலையத்திற்கு சென்றவுடன் அந்த ஊர் டிஎஸ்பி எங்களுடன் இருந்தார் எனவும் துணை முதல்வர் எங்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் மன்னிப்பு கடிதம் எதுவும் எழுதவில்லை என்றார். 

இதையும் படிங்க: Ajith Kumar: மகிழ் திருமேனியின் தூக்கத்தை கெடுத்த அஜித்! அப்படி என்ன நடந்தது?

துணை முதல்வரின் ஃபோன் கால்:

அந்த கபடி அணியின் பயிற்சியாளர் பேசுகையில், எங்கள் அணி வீராங்கணை மீது ரைட் செல்லும் போது எதிரணியை சேர்ந்தவர்கள் அடிக்க முயன்றனர், இதனை தட்டிக்கேட்ட சென்ற போது தான் கைக்கலப்பு ஏற்ப்பட்டது. இது தொடர்பாக எங்கள் ஊர் அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எங்களை அங்குள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது எங்களுக்கு பாதுக்கப்பு இல்லாத சூழல் போன்று இருந்தது. ஆனால் அந்த ஊர் டிஎஸ்பி எங்களுடன் இருந்தார். அந்த நேரத்தில் துணை முதல்வர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார், எங்கள் துணை முதல்வர் பேசுகிறார் என்ற சொன்னவுடன அவரது முகத்தில் மாற்றம் வந்து எங்களை பத்திரமாக பார்த்துக்கொண்டார். 

இதையும் படிங்க: Kris Gopalakrishnan : ஹனி ட்ராப் விவகாரம்! இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது வழக்குப்பதிவு..

கபடி வீராங்கணைக்களுக்காக ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் உடனடியாக தொலைப்பேசியில் பேசியது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.  அதன் பின்னர் டெல்லிக்கு எங்களை பத்திரமாக அழைத்து வந்து எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கினர். தாங்கள் பத்திரமாக திரும்ப உதவிய துணை முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.