உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வருகிற ஜூன் 18-ஆம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.







  • விராட் கோஹ்லி (கேப்டன்)

  • ரோகித் சர்மா

  • சுப்மன் கில்

  • புஜாரா 

  • அஜிங்கியா ரஹானே

  • விஹாரி

  • ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)

  • சாஹா (விக்கெட் கீப்பர்)

  • அஸ்வின்

  • ரவீந்திர ஜடேஜா

  • பும்ரா

  • இஷாந்த் ஷர்மா

  • முகமது ஷமி

  • சிராஜ்

  • உமேஷ் யாதவ்


தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், மயாங்க் அகர்வால், ஷர்துல் தாகூர், கே எல் ராகுல், அக்சர் பட்டேல் ஆகிய ஐந்து வீரர்கள் இறுதி போட்டியில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடம்பெறவில்லை. 


இந்திய அணியில் யார் துவக்க வீரர்கள் என்பது உறுதி 


துவக்க ஆட்டக்காரராக மயங்க அகர்வால் களமிறக்கப்பட வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் இன்னிங்ஸை தொடங்க உள்ளது உறுதியாகியுள்ளது.


ஏனினும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருமே அணியில் இடம் பெற்றுள்ளது தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருவருமே களம் இறக்கப்படுவார்களா ? அல்லது ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்திய அணி களமிறங்குமா ? தற்போதைய நிலையில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அஸ்வின், ஜடேஜா இருவருமே பந்து வீசுவது மட்டுமின்றி நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடியவர்கள்.


மேலும் அறிய : 3 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - வேகப்பந்துவீச்சில் யார் உள்ளே, யார் வெளியே ?


அதே நேரம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி இறுதி போட்டியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியில் ஜஸ்பிரீத் பும்ராஹ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.