ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாக கொண்டாடப்பட்ட நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதற்கு முன்பாக ஆலய மண்டபத்தில் பிரத்யேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாக வேள்வியும் நடைபெற்று, யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பரிவார தெய்வமான கன்னிமூல கணபதி, ஐயப்பன், பாலமுருகன், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் நவகிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி மாலைகள் அணிவித்தனர்.
தொடர்ந்து மூலவர் கணபதிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார் அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம், சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் ரயில்வே காலனி தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.