தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வாகியிருந்தார். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக இவருடைய ரத்த மாதிரியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொள்ள பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக அவர் காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். 


 


இந்நிலையில் தற்போது தனலட்சுமி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தடகள ஒழுங்குமுறை அமைப்பு(Athletics Integrity Unit) தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தனலட்சுமியின் ரத்த மாதிரியில் மெட்டாடியோனைன் என்ற தடை செய்யப்பட்ட பொருள் கண்டறியப்பட்டிருந்தது. 


 






இந்தப்  பொருளை பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டு தனலட்சுமி தடகள ஒழுங்குமுறை அமைப்பிற்கு பதில் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவருடைய தடைக் காலம் 4 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கால கட்டங்களில் தனலட்சுமியின் முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த மே 1ஆம் தேதி தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வென்ற இருந்த பட்டமும் பறிக்கப்பட்டுள்ளது. 


 


கஜகிஸ்தான் நாட்டில் கோஸ்நோவ் சர்வதேச தடகள போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனலட்சுமி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பந்தய தூரத்தை 22.89 விநாடிகளில் கடந்து தனலட்சுமி சேகர் தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தன்னுடைய சிறப்பான நேரத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். இதன்மூலம் அவர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்று இருந்தார். திருச்சி மாவட்டம் கூடுர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர், தாய் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். தன்னுடைய வறுமையை விளையாட்டு மூலம் தனலட்சுமி வென்று வந்தார். இந்தச் சூழலில் தனலட்சுமியின் தடை சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மற்றொரு தமிழ்நாடு தடகள வீரரான டொனால்ட் மகிமைராஜ் ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இவர் கடந்த ஆண்டு நைரோபியில் நடைபெற்ற யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது இடத்தை பிடித்திருந்தார். அவரும் ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கியிருந்தார். அவருக்கு தற்போது 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண