நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பாடல் 20 கோடி பார்வைகளை பெற்று சாதனைப் படைத்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “பீஸ்ட்”. அனிருத் இசையமைத்த இப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகி கடுமையான எதிர்விமர்சனங்களை பெற்றது. படத்தில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை என்றும், வில்லன், கிளைமேக்ஸ் சீன் என அனைத்தும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 






ஆனாலும் நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் தொடர்ந்து வாய்ப்பு அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை அந்நிறுவனத்தின் கீழ் நெல்சன் தான் இயக்குகிறார். மேலும் பீஸ்ட் படத்தின் விமர்சனங்களால் துவண்டு போன நெல்சனுக்கு படக்குழுவினர், இயக்குநர் நெல்சன் என அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். முதலில் விமர்சித்த ரசிகர்களும் பின் தங்கள் எண்ணத்தை மாற்றி நெல்சன் அடுத்த படத்தில் மீண்டு வர வாழ்த்து தெரிவித்தனர்.


இதனிடையே பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் பேன் வேர்ல்ட் பாடலாக அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அனிருத், சோனிட்டா காந்தி ஆகியோர் பாடியிருந்தனர். இதன் மேக்கிங் வீடியோ, படத்தில் இடம் பெற்ற நடன வீடியோ என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இப்பாடல் 20 கோடி பார்வைகளை பெற்றுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் இடம் பெற்ற வசனங்களை வைத்தே பாடல் வரிகளை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண