நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆடவர் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் புதிய தேசிய சாதனை படைத்தார்.


8.42 மீ சாதனை


இதன் மூலம் முரளி ஸ்ரீசங்கரின் 8.36 மீட்டர் சாதனையை இந்த இளம் வீரர் முறியடித்தார். கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸில் நடந்த இரண்டாவது இந்திய ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில் இந்த சாதனை வந்துள்ளது. 8.42 மீ தாண்டியதன் மூலம் அவர் தனது பெயரை வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவைத்துள்ளார்.






ஜெஸ்வினின் முந்தைய சாதனை


2020-ஆம் ஆண்டு தென்னிப்பாலத்தில் நடந்த ஃபெடரேஷன் கோப்பையின் போது ஜெஸ்வினின் முந்தைய பெஸ்ட் 8.26 மீ சாதனை வந்தது. முன்பு இதுவே அவரது தனிப்பட்ட சாதனையாக இருந்தது. இந்த சாதனை மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டது. அதே போட்டியில் அவர் 8.37 மீட்டர் பாய்ச்சலைப் பதிவு செய்திருந்தாலும், அது காற்றின் உதவியுடன் செய்யப்பட்ட முயற்சியாகும்.


தொடர்புடைய செய்திகள்: Youtuber Gopi : பரிதாபமான கோபி சுதாகர் நிலைமை. போலி டாக்டர் பட்டம்.. ஏமாந்தது எப்படி? மனம் திறந்த கோபி..


8 மீட்டர் தாண்டிய ஒரே வீரர்


இந்த புதிய சாதனை குறித்து தேசிய சாதனை எச்சரிக்கை இந்திய தடகள கூட்டமைப்பு ட்வீட் செய்துள்ளது. அதில், "போட்டியில் பங்கேற்ற 21 வயது இளைஞனின் ஆதிக்கம் வியக்கவைக்கிறது. எட்டு மீட்டர் தாண்டிய ஒரே நீளம் தாண்டுதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 8.05 மீட்டர் பாய்ச்சலுடன் முதல் முயற்சியை தொடங்கும் போதே வெற்றியாளர் என்ற நம்பிக்கையை தந்தார்", என்று எழுதி இருந்தது.






இரண்டாவது இடம்


மேலும், "அவரது இரண்டாவது முயற்சியில் 8.26 மீ தாண்டினார். அடுத்ததாக மூன்றாவது முயற்சியில்தான் இந்த சாதனையை படைத்தார். அவருக்கு அடுத்ததாக முஹம்மது அனீஸ் யாஹியா 7.85 மீட்டர் உயரம் பாய்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்", என்று டீவீட்டில் எழுதி இருந்தது.